நடிகர் ரஜினிகாந்த், தான் சிந்துவின் ரசிகராக மாறி விட்டதாக ட்விட் செய்திருந்தது குறித்து அவரது தாயார் விஜயா நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். சிந்துவின் வெற்றி குறித்து அவரது தாயார் கூறியிருப்பதாவது,
'' ரியோ ஒலிம்பிக்கில் கரோலினாவிடம் தோற்ற பின், என்னிடம் சிந்து பேசினார். ஏதோ ஒரு ஏமாற்றம் அவரிடம் இருந்தது. நான் ஆட்டம் குறித்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நீ தேசத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறாய். கவலைப்படாதே. அடுத்த முறை கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என தேற்றினேன். அதற்கு பின்னரே சிந்து சகஜமானார். சிந்துவுக்கு மைசூர் பாகு, பிரியாணி ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு வந்தவுடன் அதனை செய்து கொடுப்பேன்.
சென்னையில்தான் பல ஆண்டுகள் வசித்துள்ளேன். நன்றாகத் தமிழ் பேசுவேன். சிந்துவுக்கும் தமிழ் ஓரளவுக்குத் தெரியும். புரிந்து கொள்வார். இந்த வெற்றிக்கு முழு முதற் காரணம் அவரது பயிற்சியாளர் கோபிசந்த்தான். குழந்தை போல சிந்துவை அவர் கவனித்துக் கொள்வார்.
நடிகர் ரஜினிகாந்த், தான் சிந்துவின் ரசிகர் என்று ட்விட் செய்திருந்தார். மிகப் பெரிய நடிகரான அவருக்கே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும்போது, 'நான் சிந்துவின் ரசிகராக மாறிவிட்டேன் 'என அவர் கூறியிருந்தார். அந்த ட்விட்டை படித்ததும் எனக்கு கண்களில் நீர் திரண்டு விட்டது '' என்றார். நடிகர் ரஜினிகாந்தின் ட்விட்டை 20 ஆயிரம் ரீ ட்விட் செய்திருந்தனர். 43 ஆயிரம் பேர் லைக் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிந்து இன்று வெள்ளிப் பதக்கத்துடன் தாயகம் திரும்புகிறார். ஹைதரபாத்தில் மாநில அரசு சார்பாக பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அவருக்கு பரிசுகளை அறிவித்து வருகின்றன. இது தவிர ஹைதரபாத், விசாகப்பட்டினம், விஜயவாடாவை சேர்ந்த தொழில் நிறுவனங்களும் சிந்துவுக்கு பரிசுத் தொகை அளிக்கப் போவதாக அறிவித்துள்ளன.
ஹைதரபாத் மாவட்ட பேட்மிண்டன் சங்கத் தலைவர் சாமுண்டேஷ்வரநாத் பிஎம்டபிள்யூ கார் பரிசு அறிவித்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னாவுக்கும் இவர் பிஎம்டபிள்யூ கார் பரிசு வழங்கியிருந்தார்.
இதற்கிடையே மும்பையை சேர்ந்த 'பிட்சாஹட்' நிறுவனம் சிந்துவின் கவுரவிக்கும் வகையில், சிந்து என்ற பெயருடைய பெண்களுக்கு எல்லாம் நேற்று பிட்சா இலவசமாக வழங்கியது. முன்னதாக சாக் ஷி வெண்கலம் வென்ற போதும் இந்த நிறுவனம் சாக் ஷி என்ற பெயருடைய பெண்களுக்கு பிட்சா வழங்கி மகிழ்ந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.