அரசியலமைப்பு படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. பள்ளி விழாக்கள் மற்றும் அரசு விழாக்களில் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைப்பது போன்ற நடைமுறைகள் காலம் காலமாக நடந்து வருகின்றன. அரசு விழாக்களில் நடக்கும் இந்த நடைமுறைகளுக்கு கேரளா பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது பல விவாதங்களை உருவாக்கியுள்ளது.

கேரளாவில் 'நமக்கு ஜாதியில்லை' என்ற முற்போக்கு திட்டத்தை கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "நமது அரசியலமைப்பு சட்டத்துக்கு சாதி, மதம் இல்லை. அரசு மற்றும் பள்ளி விழாக்கள் தொடங்கும்போது குத்துவிளக்கு ஏற்றப்படுவது தேவையில்லாத ஒன்று. அதே போல பொது விழாக்களில் பக்திப்பாடல்கள் பாடப்படுவது அவசியமற்றது. மதப்பாடல்கள் பாடுவதற்கு பதிலாக தேசப்பற்றுள்ள பாடல்கள் பாடலாம்'' எனப்பேசியுள்ளார்.
அரசு அலுவலங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா அரசு ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், அமைச்சரின் இந்த கருத்துக்கு பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. "கேரளாவை ஆளும் இடதுசாரி அரசு, இந்துமக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது" என கேரளா பி.ஜே.பி பொதுச் செயலாளர் ரமேஷ் அழுத்தமாகக் கூறியுள்ளார். இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்களிலும் அரசு விழாக்களிலும் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில் அமைச்சரின் கருத்து குறித்து தமிழக அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்?
"அரசு விழாக்களில் குத்துவிளக்கு ஏற்றுவது நியாயமானதே" எனக் கூறும் பி.ஜே.பி-யைச் சேர்ந்த வானதி சினிவாசன், அதற்காக காரணங்களை அடுக்கினார். "குத்துவிளக்கு ஏற்றுவது இந்திய நாட்டிற்கு உள்ள பொதுவாக தன்மை. இதை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததாகப் பார்க்கக் கூடாது. இந்தியாவில் இருக்கும் கலைகள் அனைத்தும் வழிபாட்டு முறையுடன் ஒன்றியிருக்கிறது. பரதநாட்டியக் கலையில் கூட, இறைவன் வழிபாடு உள்ளது. நமது கலாச்சார, பண்பாட்டைச் சிதைக்க நினைப்பவர்கள்தான் இப்படிப் பேசி வருகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் உள்ள வங்கியின் பெயர் குபேரா வங்கி. இந்த நாட்டின் விமான சேவையின் பெயர் கருடா ஏர்லைன்ஸ். இப்படி பல நாடுகள் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வேளையில், இந்தியாவில் குத்துவிளக்கு ஏற்றுவதை மதத்துடன் சம்பந்தப்படுத்துவது அர்த்தமற்றது'' என்கிறார்.
கேரள அமைச்சரின் கருத்தை வறவேற்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுபவீரபாண்டியன், "மதம் என்பது அவரவர் நம்பிக்கை, வாழ்கை முறையைச் சார்ந்தது. ஒருவரின் மத நம்பிக்கையில் இன்னொருவர் குறுக்கிட முடியாது. மதம் அவரவர் தனிப்பட்ட விருப்பத்துக்கு உரியதே தவிர, பொது இடங்களுக்கு உரியது அல்ல. கல்வி கூடம் என்பது எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் சேர்ந்து படிக்கும் இடம். எல்லாக் கருத்துக்களையும் உள்வாங்கிக்கொள்கிற இடம். இங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் பழக்க வழக்கங்களைத் திணிப்பது, நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆகையால் கல்வி நிறுவனங்களில், மதச்சடங்குகளைத் திணிக்கக் கூடாது என கேரள அமைச்சர் கூறியது மிகச்சரியானது. மற்றவர்கள் பின்பற்றவேண்டியது'' என கூறுகிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.