ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து , அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான வேளையில் ஜப்பான் திட்டமிட தொடங்கிவிட்டது. இந்தியா இந்த ஒலிம்ப்பிக்கில் ஒரு வெள்ளிப்பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்று இருந்தாலும், மல்யுத்தம் , ஜிம்னாஸ்டிக் போன்ற போட்டிகளில் இளம் வீராங்கனைகள் சாதித்து இருப்பது பெரும் மகிழ்ச்சியையும், எதிர்கால ஒலிம்பிக்கில் இந்தியா சாதிக்கும் என்ற நம்பிக்கையையும் கொடுத்து இருக்கிறது.
பிரிட்டன் பத்திரிக்கையாளரான பியர்ஸ் மோர்கன் இந்தியா ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் வாங்கியதற்கு சற்று அதிகமாகவே விளம்பரம் செய்து வருகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டினார்."1.2 பில்லியன் மக்கள் கொண்ட ஒரு தேசம் , தோற்றுப்போன இரு மெடல்களைக் கொண்டாடுவது கேவலமாக இல்லையா" எனக் கேட்டார் மோர்கன். இந்த ட்விட்டிற்காக இந்திய நெட்டிசன்ஸ் மத்தியில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார் மோர்கன். ஒரு கட்டத்தில், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் இருந்தார். " என்னப்பா, எனக்கு ட்ரெண்டிங்ல வெள்ளி (இரண்டாம் இடம் ) கொடுக்கறீங்க. எனக்கு தங்கம் வேண்டும் " என்றார்.
இந்தியாவின் டாப் செல்லர் எழுத்தாளரான சேத்தன் பகத், பியர்ஸ் மோர்கனுக்கு பதில் அளித்தார். ஆனால், piersக்கு பதிலாக் peirs என குறிப்பிட்டுவிட்டார் சேத்தன் பகத். அதற்கு chetanக்கு பதில் chatan என டைப் செய்து நக்கல் அடித்தார் மோர்கன். பெயர் தவறுக்காக இருவரும் பரஸ்பரம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்கள்.
எவ்வளவு நக்கல் செய்தாலும், அதற்கு பதிலடி கொடுத்துக்கொண்டே இருந்தார் மோர்கன். அப்போது தான் சேவக் பதிலடி கொடுக்க ஆரம்பித்தார்.
ட்விட்டரின் தற்போதைய ஹீரோ முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவக், இந்தியாவிற்காக பவுலர்களை சிதறடித்தவர், தற்போது ட்விட்டரில் , பலரைக் கலங்கடித்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில்,
"`டெஸ்ட்டில் அதிவேக 300. ஒருநாள் போட்டியில் மின்னல்வேக 100... எதில் அதிக எக்ஸைட்மென்ட்?”
இப்போதைக்கு இரண்டுமே இல்லை. என் ட்வீட் 1,000 ரீட்வீட் ஆவதில்தான் இப்போது எனக்கு ஆர்வம். " என பதிலளித்தார்.. அந்த அளவிற்கு சேவக் ட்விட்டரில் சிக்ஸர்கள் அடித்து வருகிறார்.
மோர்கனின் கேள்விக்கு பதிலடி தந்த சேவக், " நாங்கள் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட கொண்டாடுவோம். ஆனால், கிரிக்கெட்டைக் கண்டுபிடித்த உங்கள் தேசம், இன்னும் ஒரு உலக கோப்பை வெல்லவில்லையே. இது வருத்துமாக இல்லையா ?" என சிக்ஸர் அடிக்க ரீட்விட்ஸ் அள்ளியது. அது மட்டும் 15000 முறை ரீட்விட் ஆனது.
இறுதியாக , " நான் இந்தியாவை நேசிக்கிறேன்.உங்கள் இதயத்துக்கு, நான் சொல்வது சரியென தெரியும். ஜப்பான் 2020 ஒலிம்பிக்கிற்கு தயாராகுங்கள் " என ட்விட்டினார் மோர்கன். அதற்கும் பதிலடி தந்தார் சேவக், " நாங்களும் இங்கிலாந்தை நேசிக்கிறோம். 2019 உலக கோப்பைக்கு தயாராகிக்கொள்ளுங்கள் " என ட்விட்டினார்.
சேவக்கிடம் அடி வாங்காத பவுலர்களே கிடையாது. இது எனக்குப் பெருமைதான் என இறுதியாக ட்விட்டினார் பியர்ஸ் மோர்கன்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.