கொசுக்கடி வாங்கினால்தான் இந்தியக் குடிமகனாக இருப்பதற்கான முதல் தகுதி என தினம் தினம் கொசுக்களுடன் உண்டு, உறங்கி, எழுந்திருக்கிறோம். பெரிய பட்ஜெட் படத்தில் கூட 'ரங்குஸ்கி' என்னும் பாத்திரத்திலேயே கொசுக்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் ரஷ்யாவில் வெறும் 43 கொசுக்கடி வாங்கிய காரணத்திற்காக, 9 வயது சிறுமிக்குப் பரிசு கிடைத்துள்ளது.
ரஷ்யாவில் காட்டுக்குள் மட்டுமே கொசுக்களை பார்க்க முடியும். இந்நிலையில் வருடா வருடம் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது இந்தக் கொசுத்திருவிழா. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை அடுத்த, பெரினிகி என்னும் நகரத்தில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் நடக்கிறது.
போட்டியாளர்கள் காட்டுக்குள் சென்று ருசியான பழங்களை பறித்துக் கொண்டுவர வேண்டும். மேலும் பழங்களைப் பறிக்கும் இடத்தில் நிறைய கொசுக்கள் இருக்கும். ஆனால் கொசுக்கடியை பொறுத்துக்கொண்டு பழங்களுடன் வர வேண்டும். இவைகள்தான் போட்டியின் விதிமுறைகள்.
அப்படிப் பழங்களைப் பறிக்கச் சென்ற ஒன்பது வயது இலுகினா என்னும் சிறுமி, 43 இடங்களில் கொசுக்கடி வாங்கி முதல் பரிசைப் பெற்றுள்ளார். நம்மளையெல்லாம் விட்டா, ரஷ்யாவில் பல வருடங்களுக்கு நம்ம சாதனையை ஒருவராலும் முறியடிக்க முடியாது.
இலுகினாவுக்கு வெற்றிக் கோப்பையும், 'மிகவும் ருசியான சிறுமி' என்ற பட்டமும் கிடைத்துள்ளது. இதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் போட்டிகள் முடிந்து பரிசு அறிவித்த அடுத்த கணமே, மருத்துவர்கள் கொசுக்கடிக்கான மருந்துகள் மற்றும் முழு உடல் பரிசோதனை என அனைத்தையும் விரைந்து செய்கிறார்கள்.
இதில் 2013-ல் கொசுக்கடி வாங்கியவர் 100 கடிகளை வாங்கியிருக்கிறார். அவரது சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லையாம்.
என்னக் கொடுமை சார்.... இந்த போட்டியை ஒலிம்பிக்ல வெச்சா நிச்சயமா இந்தியாவுக்குத்தான் தங்கம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.