சேலத்திலிருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸின் மேற்கூரை துளையிடப்பட்டு 5.75 கோடி ரூபாய் கொள்ளை போனது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கொள்ளை குறித்து முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை சேகரித்து ஆராய்ந்து வருகிறோம். விருத்தாசலத்திலிருந்து சென்னை வரை உயர்அழுத்த மின்சாரத்தில் ரயில் இயங்கும் என்பதால் அங்கே கொள்ளை நடந்திருக்க வாய்ப்புகள் குறைவு. இதனால் சேலம் - விருத்தாசலம் பகுதிக்கு உட்பட்ட ஏதாவது ஒரு இடத்தில்தான் கொள்ளை நடந்திருக்க வேண்டும் என்பதால் அந்த வழித்தடங்களில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை கூடுதல் கவனம் செலுத்தி ஆராய்ந்து வருகிறோம். மேலும், அந்தப் பகுதியில் உள்ள செல்போன் சிக்னல்கள், எஸ்.எம்.எஸ் உரையாடல்களை கண்காணித்துள்ளோம். இதில் எங்களுக்கு கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன.
சம்பவத்தன்று சின்ன சேலத்துக்கும் விருத்தாசலத்துக்கும் இடையே, கூத்தங்குடி ரயில்வே கேட் எண் 86ஐ, இரவு 11.05 மணியளவில் ரயில் கடந்துள்ளது. அப்போது 10 கி.மீட்டர் வேகத்திலேயே சென்றுள்ளது. அதுபோல வாழப்பாடி அருகில் உள்ள மின்னம்பள்ளி என்ற இடத்திலும் ரயில் ஊர்ந்து சென்றுள்ளது. இதுகுறித்து ரயில் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், பொதுப்பணித்துறை சார்பில் அந்த பகுதியில் பணிகள் நடந்ததால் ரயிலை மெதுவாக இயக்கியதாக தெரிவித்தார். இதை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் அந்தப்பகுதிகளில் கரன்சி நோட்டுக்கள் ஏதாவது சிதறி கிடக்கிறதா என்றும் தேடி வருகிறோம்.
இந்த கொள்ளையில் பணம் வைக்கப்பட்டு இருந்த மரப்பெட்டி எண் 16, 20 ஆகியவற்றை மட்டுமே கொள்ளையர்கள் உடைத்துள்ளனர். அதில் 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்துள்ளன. இந்த கோணத்தில் பார்த்தால் கொள்ளையர்களுக்கு பணம் குறித்த தகவல்கள் ஏற்கனவே யார் மூலமாகவோ சொல்லப்பட்டுள்ளது. அந்த நபர் யார் என்று விசாரணை நடக்கிறது. இதற்காக பணம் கொண்டு செல்ல பயன்படுத்திய அனைத்து நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த சுமார் 300 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள போர்ட்டர்கள், துப்பரவு பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். மேலும், பணத்தை பார்சல் செய்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்களில் 7 பேர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மேற்கூரையில் எப்படி கொள்ளையர்கள் துளையிட்டார்கள் என்பதை கண்டறிய சோதனைக்காக துளையிட்டு ஆய்வு செய்தோம். அப்போது துளையிட குறைந்தபட்சம் 50 நிமிடங்களானது. மேலும் கொள்ளையர்கள் துளையிட பேட்டரியில் இயங்கும் உளி, கட்டரைப் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம். இவ்வாறு பல கோணங்களில் கொள்ளை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வடமாநிலங்களுக்கும் போலீஸ் டீம் சென்று விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.