சட்டப்பேரவை வளாகத்திற்குள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் போட்டி பேரவைக் கூட்டத்தை நடத்தினர்.
சட்டப்பேரவைக்குள் அனுமதிக்காததால் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், இரண்டாவது நாளான இன்று போட்டி பேரவைக் கூட்டத்தை நடத்தியதால், பேரவை வளாகத்திற்குள் பரப்பரப்பான சூழல் நிலவியது. நான்காம் எண் நுழைவு வாயில் எதிரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போட்டி பேரவைக் கூட்டத்தின் சபாநாயகராக துரைமுருகன் செயல்பட்டார். மரத்தடி நிழலில் நாற்காலி போட்டு அமர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் போட்டிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பேரவைக்குள் உறுப்பினர்கள் எவ்வாறு கோரிக்கைகளை எழுப்புவார்கள், அதற்கு அமைச்சர்கள் எப்படி பதில் அளிப்பார்கள், சபாநாயகர் எவ்வாறு அனுமதி மறுப்பார் என்பது குறித்து நடித்துக் காட்டப்பட்டது.
காவிரிப் பிரச்னை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினர். சஸ்பெண்ட் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
சிலர் நாளிதழ்களை சுட்டிக்காட்டியும் பேசினர். அதற்கு எல்லாம் போட்டி சபாநாயகரான துரைமுருகன், சபாநாயகர் தனபால் போல் பேசி சிரிப்பலையை ஏற்படுத்தினார். உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் போல் பதில் அளித்த பொன்முடி முதலமைச்சரிடம் சொல்வதாக கிண்டலாக கூறினார். யாரையும் கேலி செய்யும் நோக்கில் போட்டி சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்த துரைமுருகன், போட்டிக் கூட்ட பேரவை நிகழ்ச்சிகள் நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.