நகர்ப்பகுதிகளில் வீடு கட்டுபவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சிக்கல் இடப்பற்றாக்குறை. கட்டுமான பணிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் சேமித்து வைக்க முடியாது. மேலும், நெரிசல் மிக்க இடங்களில் அதிக வேலையாட்களை ஒன்றுசேர்த்து வேலை செய்யவும் முடியாது. இதனால் கட்டிடத்திற்கு வலு சேர்க்கும் கான்கிரீட் கலவையை ரெடிமேடாக முன்கூட்டியே கலந்து விற்கும் முறை பிரபலமாகி வருகிறது.
கவனம் அவசியம்
ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவையை ஆர்டர் செய்தால் போதும். கட்டுமான வேலைகள் நடக்கும் இடத்திற்கு தேவையான அளவில் கான்கிரீட் கலவை வந்து சேர்ந்துவிடும். அதை அப்படியே நேரடியாக பயன்படுத்தலாம். அந்த கலவையை பயன்படுத்தும்போது சிமெண்டு, ஜல்லி, சிமெண்ட் என்று எதையும் கூடுதலாக சேர்க்க வேண்டியதில்லை.
வேலை எளிதாக முடிந்துவிடுகிறதே என்று ரெடிமிக்ஸ் கான்கிரீட் வாங்குபவர்கள் கவனக் குறைவாக இருந்துவிடக்கூடாது. ரெடிமிக்ஸ் கான்கிரீட்டை பயன்படுத்தும்போது கீழ்க்கண்ட அம்சங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
கான்கிரீட்டின் தரம்
எந்த நிறுவனத்தில் கான்கிரீட் வாங்கப்படுகிறதோ அந்த நிறுவனம் பயன்படுத்துகின்ற சிமெண்ட், கலவை தயாரிக்கப்படும் இடம் ஆகியவற்றை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். கலவை தயாரிக்கப்படும் இடத்திலேயே அதன் தரத்தைக் கண்டறிவதற்கான வசதிகளும் இருக்க வேண்டும்.
இடைப்பட்ட தூரம்
கட்டுமான வேலை நடக்கும் இடத்துக்கும், கான்கிரீட் தயாரிக்கப்படும் இடத்துக்கும் இடையிலுள்ள தூரம் குறைவானதாக இருக்கவேண்டும். தூரம் அதிகம் இருந்தால் பயணிக்கும் நேரமும் அதிகமாகும். கான்கிரீட் தயாரிக்கப்பட்டு இரண்டரை மணி நேரத்திற்குள் கட்டுமான வேலை நடக்கும் இடத்திற்கு வந்து சேர வேண்டியது அவசியமாகும்.
மணலின் வகை
கான்கிரீட் கலவையில் பயன்படுத்தப்படும் மணலானது தரமானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கான்கிரீட்டின் தரம் பாதிக்கப்படும். மணலின் அளவு வழக்கமான அளவைக் காட்டிலும் சிறியதாக இருந்தால் கான்கிரீட்டின் வலு பாதிப்புக்கப்படும்.
ஜல்லியின் அளவு
12.5 மில்லி மீட்டர் முதல் 20 மில்லி மீட்டர் வரையிலான ஜல்லி கற்களை மட்டுமே கான்கிரீட் கலவையில் பயன்படுத்த வேண்டும். ஜல்லியின் அளவு குறைந்திருக்கும் பட்சத்தில் கலவையில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும். சிமெண்டுக்கும் தண்ணீருக்கும் இடையிலான விகிதாச்சாரம் பாதிக்கப்பட்டால் அதைப் பயன்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படக்கூடும்.
எரிசாம்பல்
ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவையில் நிலக்கரி எரிசாம்பல் பயன்படுத்தப்பட்டால் அதன் தரமானது இந்திய தர நிர்ணய அமைப்பின் (ஐ.எஸ்.ஓ) விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தரச்சான்று விதிகள்
ரெடிமிக்ஸ் கான்கிரீட்டின் தரத்தை உறுதி செய்வதற்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே தயாரிக்கப்படும் கான்கிரீட் கலவையானது ஐ.எஸ்.4926 : 2003 என்ற தரச்சான்று விதிகளுக்கு உட்பட்டு அமைந்திருக்க வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.