Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

‌நிதி மோசடி வழக்கில் ராஜபக்சவின் மகன் கைது


இலங்கையில், நிதி மோசடி வழக்கில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனத்தின் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அபகரித்த குற்றச்சாட்டில் வாக்குமூலம் அளிக்கச் சென்றபோது காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவரை 22ம் தேதி வரை சிறையிலடைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் ஏற்கனவே மற்றொரு ஊழல் மோசடி வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.