அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனிமேல் தனியாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது கடந்த 1924-ம் ஆண்டில் முதல் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பாஜக ஆட்சியின்போது ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இதற் கான முயற்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இது தொடர்பாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை மத்திய நிதியமைச்சகம் நியமித்தது. இந்தக் குழு அண்மையில் அளித்த அறிக்கையில், ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இதனை மத்திய நிதியமைச்சகம் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்படும். தனியாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இதன்மூலம் 92 ஆண்டுகளாக தாக்கல் செய் யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் நடைமுறை முடிவுக்கு வர உள்ளது.
இது தொடர்பாக மாநிலங் களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைப் பதன் மூலம் தேசிய அளவிலான ரயில் போக்குவரத்துக்கு நீண்ட கால பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைக்கும் பட்சத்தில் இதர அரசு துறை களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப் படுவதுபோல ஒதுக்கீடுகள் இருக்கும்.
நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விவேக் தேப்ராய் கூறியபோது, ரயில்வே துறையில் பல சிக்கல்கள் உள்ளன. இதை மறு சீரமைக்கவும் நவீனப்படுத்தவும் பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்படுவது நல்லது என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.