‘‘ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நகரங்களை மட்டும் சார்ந்ததில்லை. அது, முக்கியமாகக் கிராமப்புற வளர்ச்சிகளை மட்டுமே அடிப்படையாக கொண்டது. ஆனால் தற்போதுள்ள அரசு, கிராமப்புற வளர்ச்சியைச் சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பற்றிய சிந்தனைகளையும் கருத்தில் கொள்வதில்லை’’ என்று அன்புமணி ராமதாஸ் இன்று (20-8-16) பா.ம.க சார்பில் ராஜ அண்ணாமலை புரத்தில் நடைபெற்ற பசுமைத் தாயகம் கருத்தரங்கில் பேசினார்.
‘‘தமிழ்நாட்டில் கண்டிப்பாக ஒரு மாற்றம் உருவாக வேண்டும். தற்போதுள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி ஆகியவை, கடந்த 50 ஆண்டு காலமாக நாட்டின் நலனில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. அவர்கள், சென்னை போன்ற பெருநகரங்களின் கட்டடங்களையும், அங்கு வேலைவாய்ப்பைத் தேடிவரும் 49.3 சதவிகித இளைஞர்களையுமே தங்களின் சாதனைகளாகப் போற்றுகின்றனர். இதுதான் உண்மையான சாதனையா? உண்மையில் சாதனை என்பது, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை அவர்களின் சொந்த ஊர்களிலேயே ஏற்படுத்தித் தரவேண்டும். விவசாயத்தைப் பெருக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும். ஒரு நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தால்தான், அந்த நாடு உயர முடியும். இதனை, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் மூலமாகத்தான் நிறைவேற்ற முடியும். இதற்காக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கிராமத் தலைவர்களுக்கு, நாட்டின் வளர்ச்சிப் பாதை பற்றிப் பயிற்சி அளிக்கப்படும். இதுதான் பசுமைத் தாயகத்தின் முக்கிய சிறப்பம்சம்.
கிராமப்புற வளர்ச்சி என்பது, சுகாதாரத்தையும் முதன்மையாகக் கொண்டது. நாங்கள் தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன் சரியாக எட்டு மாத காலம் ஆய்வுகள் நடத்தி, அதன் பின்தான் அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தோம். அது வந்தபிறகு, 10 ஆண்டுகளில் சுகாதாரச் சீடுகளினால் குழந்தைகள் இறப்பு 55 சதவிகிதமாகவும், தாயின் இறப்பு 50 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன் அதைப் பற்றிய ஆய்வு நடத்தி, அந்தத் திட்டம் வெற்றி பெறுமா அல்லது தோல்வியில் முடியுமா என்பதைக் கருத்தில்கொண்டு செயல்படுத்த வேண்டும்.
அமெரிக்காவில், நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் வெற்றி பெறுபவர், ஜனவரி மாதத்தில்தான் பதவியேற்க முடியும். இடைப்பட்ட காலத்தில் அவர், அதிபரின் பணிகள் பற்றியும், மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவது பற்றியும் தெரிந்துகொள்கிறார். ஆனால், நமது நாட்டில் முதல்நாள் ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றால் போதும்... அடுத்தநாளே எம்.எல்.ஏ-வாகவோ, மந்திரியாகவோ மாறிவிடுகிறார். இவர்களுக்குத் தங்களின் பணி என்ன என்பதே ஒருபோதும் தெரியாது.
இங்கு கட்சித் தலைவர்களே மக்களின் மீது அக்கரையற்றவராகத்தான் இருக்கிறார். ஏனென்றால், இது மக்களாட்சி இல்லை... மன்னராட்சி; அம்மா ஆட்சி. அதேபோல், சட்டமன்றத்தின் பெயர்கூட அம்மா மன்றம்தான். எதிர்க் கட்சியினர் ஒரு கருத்துச் சொன்னார்கள் என்றால், அதை ஜெயலலிதா ஏற்றுக்கொள்வதே கிடையாது. மக்களுக்கு ஒரு திட்டம் பயனுள்ளதா... இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் யோசிப்பதே கிடையாது. தனக்குப் பிடித்ததை மட்டும்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இதற்குப் பெயர்தான் மக்களாட்சியா? மக்களாட்சி என்பது மக்களின் நலன்மீது அக்கறை கொண்டு அவர்களுக்காகவே வாழவேண்டும். ஆனால், இங்கு எல்லாமே தலைகீழ்தான்’’ என்றார் அன்புமணி ராமதாஸ்.
அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
‘‘சட்டமன்றத்தில் நடக்கும் அமளி துமளிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’
‘‘கடந்த ஐந்து ஆண்டுகளில் எதிர்க் கட்சி என்று ஒன்று இல்லை. ஆனால், இந்த முறை பலமான எதிர்க் கட்சி ஒன்று உள்ளது. இந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் மக்களின் நலத் திட்டங்கள், பிரச்னைகளைப் பற்றி பேசுவதே கிடையாது. அவர்களின் சொந்தப் பிரச்னையை மட்டும்தான் பேசிக்கொள்கிறார்கள். இவர்களை, கலைஞர் என்று ஏன் அழைக்கவில்லை என்றும், ஜெயலலிதாவை, அம்மா என்று ஏன் அழைக்கவில்லை என்றும், சரியான மரியாதை தரவில்லை என்றும், இருக்கைகள் சரியாக இல்லை என்றும்தான் சட்டமன்றத்தில் பேசுகின்றனர். தவிர, தமிழக மக்களின் உயிர்நாடி பிரச்னையான காவிரி, பாலாறு, மீனவர்கள் பிரச்னையைப் பற்றி ஒருபோதும் விவாதம் செய்வதில்லை. ஏதோ ஒரு நாடகம் நடத்தி மக்களை முட்டாளாக்குகின்றனர்.’’
‘‘இதற்கு என்ன தீர்வு என்று நினைக்கிறீர்கள்?’’
‘‘சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் மக்களுக்குத் தெரிய வேண்டும். எப்போது சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்புச் செய்யபடுகிறதோ, அப்போதுதான் இவர்கள் மக்களைப்பற்றிப் பேசவே ஆரம்பிப்பார்கள். அதுவரைக்கும் சட்டமன்றம் இப்படித்தான் இருக்கும்.’’
‘‘ ‘சென்றமுறை நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் சரியாக நடத்தப்படவில்லை’ என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே? ‘இந்த முறை உள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகள், வெளிமாநில அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும்’ என்று ஒரு கோரிக்கை உள்ளதே... அதுபற்றி உங்கள் கருத்து?’’
‘‘கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. நாங்கள் வெற்றிபெற்ற சில இடங்களில் அவர்கள் வெற்றிபெற்றதாக அறிவித்தார்கள். அவ்வளவு ஏன்? சில மாதங்களுக்கு இந்திய அரசால் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலே நியாயமாக நடைபெறவில்லை. 90 சதவிகிதத் தேர்தல் அதிகாரிகள், ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், இந்த உள்ளாட்சித் தேர்தலோ தமிழக அரசின் மூலம் நடத்தப்படுகிறது. பின்னர், எப்படி இது நியாமாக நடைபெறும்? உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் நடைபெறும். இதனைக் குறைந்த அளவேனும் தடுப்பதற்காக வெளிமாநில அதிகாரிகளை நியமனம் செய்யவேண்டும். எப்படி இருந்தாலும் பா.ம.க தனித்து நின்றே நியாயமான முறையில் செயல்படும்.”

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.