இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு ரூபாய் இருந்தால் ஒரு நாளை கழித்துவிடலாம். ஒரு ரூபாய்க்கு அவ்வளவு மதிப்பிருந்தக் காலம் அது. ஆனால் இன்றைக்கு ஒரு ரூபாயை யாரும் மதிப்பதில்லை. எல்லாப் பொருட்களுடைய விலைவாசியும் உயர்ந்திருச்சு. ஆனால், அன்று முதல் இன்று வரைக்கும் பாளையங்கோட்டையில் உள்ள 'ஒரு ரூபாய் வடை கடை' யில வடையோட விலை ஒரு ரூபாய்தாங்க.
கடையோட உண்மையான பெயரு ஜெயந்தி டீ ஸ்டால். ஒரு சின்ன கடைதான். கடையில எப்பவுமே வேலை செய்யும் தொழிலாளர்களும், அந்தக் கடையைச் சுற்றி நிறைந்திருக்கும் வடை பிரியர்களும் என கடை முன்னால் எப்பொழுதுமே ஜே..ஜே...வென்று கூட்டம்தான்.

ஒரு டீயே 8 ரூபாய்க்கு விற்கிற இந்த காலத்திலும் ஒரு ரூபாய் வடை எப்படி சாத்தியம் என்பதையும், 31 ஆண்டுகளாக இதனை எப்படி கடைபிடிக்க முடிந்தது என்பதையும் விளக்குகிறார் கடை உரிமையாளர் ராபின்ஸடன்.
"வசவப்புரம்தான் என் சொந்த ஊர். என் கடைக்குட்டி தங்கை ஜெயந்தி மீதான பாசத்தால், அவரது பெயரையே கடைக்கு சூட்டினேன். ஆரம்பகாலகட்டத்துல டீ மட்டும்தான் விற்பனை செஞ்சேன். ஆனா சில வருஷங்களுக்கு அப்புறம் வடை போடுறதையே பிரதானமா செய்யுறதுன்னு முடிவு செய்தோம். ஆனா அப்படி முடிவு எடுத்தப்போ, 'கடையில விக்கிற வடையோட விலை ஒரு ரூபாய் மட்டும்தான். எக்காரணம் கொண்டும் முடிவை மாற்றிக்கொள்ளக்கூடாது'ன்னு தீர்மானிச்சோம். இந்த முடிவு தான் மக்கள் மத்தியில் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு. அன்றிலிருந்து இன்று வரை வடையோட விலையை மாற்றவில்லை அதே ஒரு ரூபாய்தான்.

ஆரம்ப காலகட்டத்துல ஐநூறு வடை வரைக்கும் விக்கும். ஆனால் இன்று ஏழாயிரம் வடை வரைக்கும் விற்பனை ஆகுது. புதுசா தொழில் பண்ணனும்னு நினைக்கிறவங்க, கடுமையாக உழைக்கணும். செய்ய நினைக்கும் தொழிலை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு உழைக்க வேண்டும்" என்கிறார்.
ஆசிரியையாக பணியாற்றும் அவரது மனைவி, " ஆரம்ப காலகட்டத்துல வடைக் கடைகாரரோட மனைவி என்று கூறத் தயங்கியது உண்டு. ஆனால் இன்று ஒரு ரூபாய் வடைகாரரின் மனைவி என்று கூறுவதில் பெரும் மகிழ்ச்சி" என்று பெருமையுடன் கூறுகிறார்.
தன்னம்பிக்கையும்,உழைப்பும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்பதற்கு இந்த ஒரு ரூபாய் வடை கடை ஒரு சாட்சி!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.