Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 6, 2016

உணவகத்தில் பணியாற்றும் ஒபாமாவின் மகள்


ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மகள் சாஷா ஒபாமா, வெள்ளை மாளிகையின் வசதிகளை துறந்து, கடலுணவு உணவகமொன்றின் சேவை முகப்பு நிலையமொன்றில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. 
மஷஷூஷஸ் மாநிலத்தில் உள்ள மர்தாஸ் வின்யார்ட் தீவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில், கோடைகால வேலையாக,  15 வயதான சாஷா உணவு பரிமாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தனது முழுப் பெயரான நதாஷா எனும் பெயரைப் பயன்படுத்திய சாஷா, உணவகத்தில், ஆறு பேரைக் கொண்ட இரகசிய சேவை முகவர்களுடனேயே உணவகத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோடைகால விடுமுறைகளின் மேற்கூறப்பட்ட மர்தாஸ் வின்யார்ட்டே,  ஒபாமா குடும்பத்தினரின் விரும்பத்தக்க இடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒபாமாவின் இளைய மகளான சாஷா, குறித்த உணவகத்தின்  சீருடையான நீல நிற டி-ஷேர்ட்டையும் தொப்பியையும் அணிந்து பணியாற்றுவதை புகைப்படங்கள் காண்பித்துள்ளன.
 இதேவேளை, கருத்து தெரிவித்த சக ஊழியர் ஒருவர்,  உணவு எடுத்துச் செல்லும் இடத்தில், கீழ் மாடியில் அவர் பணியாற்றியதாகவும், அந்த யுவதிக்கு ஏன் ஆறு பேர் உதவுகின்றனர் என தாங்கள் ஆச்சரியப்பட்டதாகவும், எனினும் பின்னர் அவர் யார் என கண்டுகொண்டதாக கூறியுள்ளார்.   மேற்குறித்த தகவல் குறித்து வெள்ளை மாளிகை கருத்து எதனையும் தெரிவிக்காத போதும், தனது இரண்டு மகள்களையும் இயலுமானவரை சாதாரண நிலைக்கு கொண்டு வர முயற்சிப்பதாக முதற் பெண்மணி மிச்செலி ஒபாமா தெரிவித்திருந்தார். 
உணவு எடுத்துச் செல்லும் முகப்பு நிலையத்தில் பணியாற்றுவது தவிர, மதிய நேரத்துக்கு உணவகத்தை திறப்பதற்காக உணவகத்தை தயார்படுத்த உதவி செய்வது மற்றும் மேசைகளில் உணவு பரிமாறுவதும் சாஷாவின் ஏனைய பணிகளாக உள்ளன.

 சாஷா பணியில் ஈடுபடும்போது அவரது அணியினர், அருகிலுள்ள பாரில்
காத்திருக்கின்றனர் அல்லது மேசைகளில் அமர்ந்திருக்கின்றனர்.   

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.