கடந்த 2003ம் ஆண்டு ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி. பெய்ரூட்டில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஈராக் அணி ஜப்பானை சந்தித்தது. இந்த போட்டியில் ஈராக் அணி மோசமாக விளையாடி தோற்றுப் போனது. போட்டி முடிந்து ஈராக் அணி தாயகம் திரும்பியது, விமான நிலையத்தில் இறங்கிய வீரர்கள் நேரடியாக சதாம் உசேனின் மகன் உதே உசேனின் மாளிகைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மோசமாக விளையாடிய கால்பந்து வீரர்களின் கால் விரல்களை வெட்டக் கூட உதே உத்தரவிட்டதாகவும் பின்னர் உதே என்ன நினைத்தாரோ தெரியவில்லை. முடிவை மாற்றிக் கொண்டு, கால்பந்து வீரர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டதாக 'டெய்லி டெலிகிராப் ' பத்திரிகை ஒரு முறை செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்து 13 ஆண்டுகளுக்கு இப்போது அதே போன்ற ஒரு சம்பவம் வடகொரியாவில் நடந்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடங்குவதற்கு முன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் வுன் மொத்தம் 17 பதக்கங்களை வெல்ல வேண்டுமென்று தனது நாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதில், 5 தங்கப்பதக்கங்கள் கண்டிப்பாக வெல்ல வெல்ல வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் பளு துக்குதலில் 2 தங்கம் 3 வெண்கலம் ஜிம்னாஸ்டிக்கில் 3 வெள்ளி என வடகொரியாவால் 7 பதக்கங்களை மட்டுமே ரியோவில் வெல்ல முடிந்தது. தற்போதைய பதக்க எண்ணிக்கையை விட கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் கூடுதலாக ஒரு தங்கப் பதக்கம் வடகொரிய அணி வென்றிருந்தது.

பதக்க எண்ணிக்கை குறைந்ததையடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்கள் அனைவரையும் சுரங்கத்தில் வேலை பார்க்க வடகொரிய அதிபர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடகொரிய அதிபரின் கோபத்திற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அண்டை நாடான தென்கொரியா, ரியோ ஒலிம்பிக்கில் 21 பதக்கங்களை வென்றதுதான்.. இதில் 9 தங்கமும் 3 வெள்ளியும் 9 வெண்கலமும் அடங்கும். வடகொரியா வெறும் 2 தங்கம் வென்றுள்ள நிலையில் எதிரி நாடான தென்கொரியா 9 தங்கப்பதக்கங்களை கைப்பற்றியது கிம் ஜாங் வுன்னின் கோபத்தை ஏகத்துக்கும் கிளயிருக்கிறது. அது மட்டுமல்ல பதக்கப் பட்டியலில் தென்கொரியா 8வது இடத்தை பிடித்தது. வடகொரியாவோ அதனை விட 26 இடங்கள் பின்தங்கி 34வது இடத்தையே பிடித்திருக்கிறது. இதையடுத்துதான் பதக்கம் வெல்லாதவர்களுக்கு கடும் தண்டனை தரப்பட்டுள்ளதாம்.
பதக்கம் வென்ற வீரர்களுக்கு புதிய பங்களா, ரேசனில் கூடுதல் சலுகைகள், கார் ஆகியவை பரிசாக வழங்ப்படவிருக்கிறது. தண்டனைக்குள்ளாகும் வீரர்கள் வசித்து வரும் வீடுகள் பறிக்கப்பட்டு, வசதி குறைந்த வீடுகள் வழங்கப்படும். ரேசனில் வழங்கப்பட்டிருந்த உணவுச் சலுகைகளும் ரத்து செய்யப்படவுள்ளன. ரேசன் கார்டையே பறித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம். வடகொரியாவில் ரேசன் கார்டு இல்லையென்றால் உணவுப் பொருட்களும் பெற முடியாது.

வடகொரிய விளையாட்டு வீரர்கள் தண்டனைக்குள்ளாவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2010ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு வடகொரிய அணி முதல் முறையாக தகுதி பெற்றிருந்தது. அதன் போதாத நேரம் 'குரூப் ஆப் டெத்' தில் மாட்டிக் கொண்டது. இந்த பிரிவில் பிரேசில், போர்ச்சுகல், ஐவரிகோஸ்ட் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. இந்த 3 அணிகளுமே கால்பந்து ஆட்டத்தில் வடகொரியாவை விட பல மடங்கு பலம் வாய்ந்தவை. முதல் சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் 2 -1 என்று வடகொரியா தோற்ற போது, வடகொரியர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். ஆனால் அடுத்து நடந்த மோதலில், போர்ச்சுகல் அணி வடகொரியாவை பின்னி எடுத்து விட்டது. இந்த போட்டியில் 7 கோல்கள் அடித்து வடகொரியாவை தோற்கடித்தது போர்ச்சுகல். அடுத்து ஐவரிகோஸ்ட் அணியிடமும் 3 கோல்கள் வாங்கி தோற்று போனது. மொத்தம் 12 கோல்கள் வாங்கி முதல் சுற்றிலேயே வடகொரிய அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. இதையடுத்து நாடு திரும்பிய வடகொரிய வீரர்கள் சில காலம் சுரங்கத்தில் அடைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர்.
வடகொரியாவில் இப்படி நிலையென்றால், ஜிம்பாப்வேயில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற அத்தனை வீரர்களும் பதக்கம் வெல்லததால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியோ ஒலிம்பிக்கிற்கு ஜிம்பாப்வே மொத்தம் 31 வீரர் -வீராங்கனைகளை அனுப்பியிருந்தது. ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. இதையடுத்து, ஜிம்பாப்வே போலீஸ் தலைவருக்கு அந்த நாட்டு அதிபர் ராபர்ட் முகாபே வீரர் - வீராங்கனைகளை கைது செய்யத உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
'' அத்லெட்டுகள் என்ற பெயரில் இந்த எலிகளுக்கு அதிகத் தொகை செலவிழத்திருக்கிறோம். இவர்களால் அலுமினிய, பித்தளை பதக்கங்கள் கூட வாங்க முடியவில்லை (அதாவது 4, மற்றும் 5வது இடத்தில் கூட வரமுடியவில்லை என குறிப்பிடுகிறார்). வெறுமனே தேசியக் கொடியை உயர்த்திக் கொண்டு, அணிவகுப்பில் பங்கேற்கவும் தேசிய கீதம் பாட மட்டும்தாதானா இவர்களை அனுப்பினோம். இதற்கு பதிலாக அழகான பெண்களையும் கவர்ச்சியான ஆண்களையும் ரியோவுக்கு அனுப்பியிருப்பேன்'' என ராபர்ட் முகாபே கொதித்துள்ளார்.
ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என தற்போது ஜிம்பாப்வே அரசு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.