Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 5, 2016

மதுவிலக்கெல்லாம் கிடையாது, குறைவாக குடியுங்கள்..! ஒரு முதல்வரின் அட்வைஸ்


'மதுவிலக்கு முடிவை அவசரமாக எடுக்க முடியாது, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்குக் கூற முடியும்' என்று உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் முழு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார் அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார். இதனால், அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்துக்கு 'குடிமன்னர்கள்' படை எடுப்பதால் அங்கு மதுவிற்பனை அதிகரித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அகிலேஷ் யாதவ்," உத்தரபிரதேசத்தில் முழு மதுவிலக்கு முடிவை உடனடியாக கொண்டு வருவது சாத்தியமல்ல, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்கு அறிவுரை வழங்க முடியும்.

கரும்பு விவசாயிகளின் நலன், மதுக்கடைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும் இது. எனவே எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.