கற்பித்தலில் மெதுவாகக் கற்கும் மாணவர்களை கவரும் வகையில் புதிய உத்தியை கையாண்டு அசத்துகிறது நாகை மாவட்டம் காடம்பாடியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆர்வத்தோடு பாடங்களை கற்றுக்கொள்ள வைப் பதும் கவனம் சிதறாமல் செய்தி களை உட்கிரகிக்க வைப்பதும் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் கற்பிப்பது ஒன்றே அவர்களின் மனதில் பதியச் செய்யும் வழியாக உள்ளது. இத் தகைய மாணவர்களுக்காக ஆசிரி யர்கள் புதுப்புது உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
அப்படி ஒரு புது முயற்சிதான் காடம்பாடி பள்ளியில் செயல் படுத்தப்பட்டுள்ளது. தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் மீனவர்க ளின் குழந்தைகள் அதிக அளவில் காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயில்கின்றனர். இந்த மாணவர்களின் கற்றல் நிகழ்வு வகுப்பறையிலும் பள்ளி வளாகத்தி லும் மட்டுமே நடைபெறுகிறது. தொடர் செயல்பாடான வீட்டுப் பாடம் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் நடைபெறு வதில்லை. அதற்கான சூழல் அந்த மாணவர்களுக்கு இல்லை. இதனால், கற்ற பாடங்களை நினை வில் வைத்துக்கொள்ள மாணவர் கள் சிரமப்படுகின்றனர்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முற்பட்ட இப்பள்ளியின் தலைமையாசிரியர் இளமாறன் மற்றும் ஆசிரியர்கள் ஆலோ சித்து, மாணவர்கள் கற்ற பாடங் களை மீண்டும் நினைவில் வைத்திருக்க வணிக வளாகங்களில் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படும் மின் ஒளித் திரையை வகுப்பறையில் உப யோகப்படுத்தலாம் என திட்ட மிட்டனர். இத்திட்டத்துக்கு, பள்ளியு டன் கைகோர்க்க நாகை ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த நம்பியார் நகர் குமார் முன்வந்தார். அவரது உதவியால் ரூ.30,000 செலவில் 4.2 அடி அகலமுள்ள மின் ஒளித்திரை, பள்ளியில் சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்டது.
இந்த மின் ஒளித்திரையை கணினியுடன் இணைத்துள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய பாடங்களை கணினியில் உள்ளீடு செய்கின்றனர். அவை மின் ஒளித்திரையில் தொடர்ந்து ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. உதாரணமாக தமிழில் மனப்பாடம் செய்ய வேண் டிய திருக்குறள் பகுதியை உள்ளீடு செய்துவிட்டால் அது ஒளிர்ந்து கொண்டே இருக்கும். இதனை மீண்டும் மீண்டும் பார்க்கும், படிக்கும் மாணவர்களுக்கு அந்த வார்த்தை, வாக்கியம் எளிதில் மனதில் பதிந்துவிடுகிறது. இதுபோல, ஆங்கிலத்தில் உள்ள கடினமான வார்த்தைகள், கணித சூத்திரங்கள், அறிவியல் கண்டு பிடிப்புகள், விஞ்ஞானிகளின் பெயர்கள், வரலாற்றில் முக்கிய மான வருடங்கள், ஆகியவற்றை உள்ளீடு செய்து சுழற்சி முறையில் பள்ளி நேரம் முழுவதும் அவை திரையில் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், மெது வாகக் கற்கும் மாணவர்கள் கற்ற பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வது சுலபமாக உள்ளது.
மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்காக ஆசிரியர்கள் ஏற்படுத்திய இப்புதிய முயற்சி, மிகுந்த பலனைத் தருவதாக ஆசிரியர்களும், மாணவர்களும் உற்சாகத்துடன் சொல்கிறார்கள். மற்ற பள்ளிகளுக்கும் இத்திட்டம் பரவி, மாணவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கட்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.