Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 3, 2016

மேலும் வாசிக்க…'ஒலிம்பிக் பதக்கமே லட்சியம்..!' - சர்ச்சையை சவாலாக மாற்றிய நர்சிங்


''ரியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்காக பதக்கம் வெல்வேன்" என்று ஊக்க மருந்து சர்ச்சையில் இருந்து விடுவிக்கப்பட்ட மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் போட்டி, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில், வரும் 5ம் தேதி தொடங்குகிறது. இதில்  74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க, மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் தகுதி பெற்றிருந்த நிலையில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதனால், அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பாராஎன்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக, தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் நடத்திய விசாரணையில், இந்திய விளையாட்டு ஆணைய விடுதியில் வழங்கப்பட்ட உணவில்தான் ஊக்கமருந்து கலந்திருந்தது என்றும், இதில் நர்சிங் யாதவ் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் ரியோ ஒலிம்பிக்கில், இந்தியா சார்பில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், நர்சிங் யாதவ் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அப்போது, எந்த பதற்றமும் இன்றி ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்று நர்சிங்குக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நர்சிங், இந்தியாவுக்காக ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வெல்வேன் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.