நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்தல் செலவு செய்ததில், முதல்வர் ஜெயலலிதாவை முந்தி உள்ளார் மு.க.ஸ்டாலின்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 16ஆம் தேதி நடந்தது. வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல், வேட்பாளர்களின் செலவுகள் கணக்கிடப்பட்டன. மேலும் வேட்பாளர்களின் பிரசாரம், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வருகைக்காக ஆன செலவுகள் அனைத்தும், வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்பட்டது. தேர்தல் நாள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாளிலும் வேட்பாளர்களின் செலவு கண்காணிக்கப்பட்டது. அதிகபட்சமாக வேட்பாளர்கள் ரூ.28 லட்சம் வரை செலவு செய்ய ஆணையம் அனுமதி அளித்தது.
மனுதாக்கலில் இருந்து இதுவரை 3 முறை வேட்பாளர்களின் செலவு விவரத்தை தேர்தல் ஆணையத்தின் செலவு கணக்கு பார்வையாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ள செலவு குறித்து, விளக்கம் கேட்டு வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். வாக்கு எண்ணிக்கை 19ஆம் தேதி நடந்தது. அதில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள், தங்களது செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வேட்பாளர்கள் அனைவரும் ஜூன் 17ஆம் தேதிக்குள் தங்களது செலவு கணக்கை சமர்ப்பித்தனர். செலவு கணக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள், அடுத்த தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆர்கேநகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா ரூ.24.55 லட்சமும், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சமும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி ரூ.25 லட்சமும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரூ.16.70 லட்சமும், காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ரூ.15.90 லட்சமும், பொன்னாரம் தொகுதியில் போட்டியிட்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ரூ.19 லட்சமும் தேர்தலில் செலவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.