சட்டமன்றத்தில் இன்று நடந்த மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் மீது சிவாஜியின் பாடலை பாடி கலகலப்பு உண்டாக்கினார் அத்துறையின் அமைச்சர் விஜயபாஸ்கர்.
சட்டசபையில் இன்று மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அத்துறையின் அமைச்சர் விஜயபாஸ்கர் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து பேச ஆரம்பித்தார். ஆரம்பம் முதல்லே ஜெயலலிதா புகழை பாடத் துவங்கியவர், இடையில் நிறுத்தி குட்டி கதை ஒன்றையும் சொன்னார்.
' ஒருவன் கையில் புண் இருந்துள்ளது. அவன் கையை உடலில் தொடும்போது எல்லாம் வலி ஏற்பட்டதும், தனக்கு உடம்பு முழுவதும் வலி உள்ளது என்று மருத்துவரிடம் சொல்லியுள்ளான். ஆனால் அவன் கையில் இருந்த புண்ணால் தான் இந்த வலி ஏற்படுகிறது என்று உணராமல் அவன் இருந்ததுபோலதான், எதிர்கட்சியினர் தங்கள் மீது உள்ள குறைகளை ஆளும் அரசு தான் செய்கிறது என்று குறைகூறி வருகிறார்கள்'என்று குட்டி கதையால் தி.மு.கவிற்கு குட்டு வைத்தவர், அடுத்து அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை வரிசையாக பட்டியலிட்டுக் கொண்டே வந்தார்.
ஒரு கட்டத்தில் திடீர் என பேச்சை நிறுத்தி “இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே” என்ற பாடலை முதல்வரின் இருக்கையை நோக்கிப் பாட சபை முழுவதும் சிரிப்பொலி. தி.மு.க வினர் யாரும் சபையில் இல்லாததால் எந்த குறுக்கீடும் இல்லாமல், தொடர்ந்து பேச முடிந்தது. “ குரு ஒருவர், தன் சிஷ்யரிடம் ஒரு விதையை கொடுத்து அதை மூன்று மாதத்தில் முளைக்க வைத்து காட்டு” என்று சொல்லியதோடு, அதை மண்ணில் புதைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி வரவேண்டும் என வளர்க்கும் முறையையும் எடுத்துக் கூறியுள்ளார்.
மூன்று மாதங்கள் கழித்து குரு தனது சிஷ்யரிடம் விதை பற்றி கேட்டார். அதற்கு சிஷ்யன் குருவிடம், “ நீங்கள் சொன்ன மாதிரி எல்லாம் செய்தும், விதை முளைக்கவில்லை என்றான். குரு குழப்பத்தோடு “ தினமும், தண்ணீர் ஊற்றி ஒழுங்காக பராமரித்தாயா? ”என்றார். “மண்ணில் புதைத்ததுமுதல் தினம் தண்ணீர் ஊற்றியதோடு, அது ஒழுங்காக வளர்கிறதா என்றும் தொடர்ந்து பார்த்து வந்தேன் என்று சொல்லியுள்ளார்.
அதுபோல் குருவாக இருக்கும் சபாநாயகரின் ஞானம் எதிர்க்கட்சியினருக்கு புரியாமல், அவசரத்தால், இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்” என்று அடுத்த குட்டி கதை கூற, முதல்வரை மட்டுமே இதுவரை புகழ்ந்த சட்டமன்றத்தில் தன்னையும் அமைச்சர் ஒருவர் புகழ்ந்ததை எண்ணி புன்சிரிப்பினை உதிர்த்தார் சபாநாயகர். குட்டி கதையும், பாடலும், என தனது மானிய கோரிக்கையை கலகலப்பாக்கிவிட்டார் விஜயபாஸ்கர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.