Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 6, 2016

மூளையை செயலிழக்க வைக்கும் ஸ்மார்ட் போன்கள்...!


ஸ்மார்ட் போன்கள் மோகத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிரீர்களா? உங்கள் செல்போன் நம்பர் கூட மனதில் வைத்துகொள்ள முடியாத அளவு நியாபக மறதியா? அப்ப நீங்களும் டிஜிட்டல் அம்னீசியாவால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள்!

அது என்ன டிஜிட்டல் அம்னீசியா? வீட்டு முகவரி, செல்போன் நம்பர் இப்படி சின்ன சின்ன விஷயங்களும் மறக்கும் நிலையே இந்த வினோத நோய்.. இந்நோய் பற்றி கேஸ்பர்ஸ்கை லேப் செய்துள்ள ஆராய்ச்சியில் மனிதர்கள் கட்டாயமாக அறிய வேண்டிய 50 சதவிகித தகவல்கள் ஸ்மார்ட் போன்களே தருகின்றன. இந்த ஆராய்ச்சியின் படி 91% மக்கள் தங்கள் மூளைக்கு பதிலாக ஸ்மார்ட் போனையே நம்பியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக சிறு செய்திகளை கூட நினைவில் வைத்து கொல்லாத அளவு நம் மூளை சுருங்கிவிட்டது. இதன் விளைவு ஸ்மார்ட் போனை இழப்பது நம் மூளையை இழப்பதற்கு சமம் என்கிறது அந்த ஆராய்ச்சி.! இதனால் நம் நண்பரின் மொபைல் என்னை மட்டுமல்லாது பல நினைவூட்டக்கூடிய தருணங்களையும், புகைப்படங்களையும் இழக்க வேண்டியிருக்கும்.

கேஸ்பர்ஸ்கை லேப் ஆராய்ச்சியின் படி 16 முதல் 24 வயதிற்குள் இருக்கும் நபர்களில் 25% மக்கள் தங்கள் ஸ்மார்ட் போனை தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் இருந்தனர். இதற்கு காரணம் அவர்களின் முக்கிய தகவல்கள் மற்றும் மொபைல் எண்களையும் புகைபடங்களையும் பேக் அப் செய்யாமல் இருந்தது தான். மேலும் கூடுமானவரை சில முக்கிய தகவல்களுக்கு போனில் மட்டுமல்லாமல் மனதிலும் நிலை நிறுத்தி வைப்பது ஆபத்து காலங்களில் நமக்கு கைகொடுக்கும். ஏனெனில் மனித மூளை மட்டுமே எப்போதும் யாராலும் திருட முடியாத ஒன்று! நம் கையே நமக்கு உதவி அல்லவா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.