Latest News

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 3, 2016

நேபாள நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்தவர் ரியோ ஒலிம்பிக்கில் சாதனை!

நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த 13 வயது கௌரிகா சிங் என்ற நீச்சல் வீராங்கனை, ரியோ ஒலிம்பிக்கின் இள வயது போட்டியாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டி, வரும் 5ம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி, ரியோ நகரில் வீரர் வீராங்கனைகள் குவிந்து வருகின்றனர். ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களில் மிக இளவயது போட்டியாளர் என்ற பெருமையை, நேபாள நீச்சல் வீராங்கனை கௌரிகா சிங் பெறுகிறார்..

 நேபாளத் தலைநகர், காத்மண்டுவில் நடந்த நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர் இந்த கௌரிகா சிங். பதின்மூன்று வயது, 255 நாட்களே நிரம்பிய இவர், ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சலில் பங்கேற்கிறார்.

கௌரிகாவுக்கு இரண்டு வயது இருக்கும்போதே, பெற்றோர் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்து விட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில், காத்மண்டுவில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்க கௌரிகா சிங் வந்திருந்தார். காத்மண்டுவில் 5 மாடிக் கட்டடத்தில் தாயுடன் தங்கியிருந்தார். அப்போதுதான் காத்மண்டுவை நிலநடுக்கம் தாக்கியது. பக்கத்து கட்டடங்கள் எல்லாம் சிதைந்துபோக,  கௌரிகா சிங் குடும்பத்தினர் தங்கியிருந்த கட்டடம் புதியது என்பதால் பாதிப்படையாமல் தப்பித்தது. இதனால் கௌரிகா சிங் உயிர் தப்பினார். அப்போது உயிர் தப்பியவர்தான் இப்போது ஒலிம்பிக்கில்  சாதனை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.