சென்னை தீவுத்திடலில் ஏழை பெண்களின் கல்விக்கு உதவும் விதமாக, மாரத்தான் ஓட்டம் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.
நேற்று காலை ஆறு மணிக்கு தொடங்கிய இந்த ஓட்டம், ஆறு ஐம்பது மணியளவிற்கு நிறைவடைந்தது. நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், கொடி அசைத்து இந்த ஓட்டத்தை தொடக்கி வைத்தார். ஐந்து கி.மீ., பத்து கி.மீ. என்ற இரண்டு பிரிவுகளில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. தீவுத்திடலில் துடங்கி, சென்னை லைட் ஹவுஸ் வரை சென்று பின் தீவுத்திடலுக்கு திரும்புவதே இந்த மாரத்தான் ஓட்டத்தின் இலக்கு.

மற்ற மாரத்தான் ஓட்டம் போன்று இல்லாமல், இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஈட்டப்படும் வருவாய் அனைத்தும் ஏழை பெண்களின் கல்விக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்பட உள்ளது. "ஒரு ஆணை படிக்க வைத்தால் ஒரு மனிதனை படிக்க வைப்பார். ஒரு பெண்ணை படிக்க வைத்தால் ஒரு குடும்பத்தை படிக்க வைப்பாள்" என்பது போல பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்களாலேயே ஏற்பாடு செய்யபட்டதுதான் இந்த மாரத்தானின் சிறப்பு.

"நான் ஓடுவதால் அவள் படிப்பாள் (I run, She learns)", "பெண்களின் படிப்பிற்காக ஓடுகிறோம் (Run to Educate)", என்பது போன்ற வாசகங்கள் தீவுத்திடல் எங்கும் காணப்பட்டன. தங்களால் பெண்களின் படிப்பு முன்னேற்றம் அடைய போகிறது என்ற உற்சாகத்தில், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த மாரத்தானில் பங்கேற்றனர். இந்த மாரத்தான் ஓட்டத்தால், தீவுத்திடலே விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாரத்தான் ஓட்டம் ஓடுபவர்களுக்கு "வார்ம் அப்" செய்யும் வகையில் "ஃபிட்நெஸ் பட்ரோல்" அணி பயிற்சி அளித்தது. விழா முடிந்ததும் ஆண்கள், பெண்கள் என்று இரண்டு பிரிவினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விருதுகளை வைஷ்னவா கல்லூரி முதல்வர், இணைச் செயலாளர் மற்றும் லண்டன் ஒலிம்பிக்ஸில் டென்னிஸ் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடிய ருஷ்மி சக்கரவர்த்தியும் வழங்கினர். பத்து கி.மீ. ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த யோகேஷ், மனோ, விக்டர் சாமுவேல் ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த அர்ச்சனா, கலிபோர்னியாவை சேர்ந்த க்ரேஸ், சென்னையை சேர்ந்த ரிதன்சா ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். அதில் மூன்றாம் இடத்தை பிடித்த ரிதன்சா தன் பரிசான ஐந்தாயிரம் ரூபாயை பெண்கள் கல்விக்காக திரும்ப வழங்கினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.