பெண்களை 14 விநாடிகள் அல்ல, 10 விநாடிகள் உற்றுப்பார்த்தாலே குற்றம்தான் என்று தேசிய மகளிர் நல ஆணையத்தின் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறினார்.
கேரள மாநிலத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைப் பிரிவு ஆணையராக உள்ள ரிஷிராஜ் சிங், கல்லூரி ஒன்றில் மாணவிகளிடையே பேசிய போது, ஒரு பெண்ணை, தொடர்ந்து 14 விநாடிகள் வெறித்துப் பார்த்தாலே சம்பந்தப்பட்ட ஆண் மீது வழக்குத் தொடர முடியும் என்று அண்மையில் பேசியிருந்தார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்னை வந்த தேசிய மகளிர் நல ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பெண்களை 14 விநாடிகள் அல்ல; 10 விநாடிகள் உற்றுப் பார்த்தாலே குற்றம்தான் என்று கூறினார்.
மேலும், எல்லா சமூக பெண்களுமே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். சுவாதி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.