பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாகத் தங்களுடைய குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்துகொண்டிருக்கும் இந்தியர்கள், ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்னைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போது லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரியும் சவுதி அரேபியாவில், சவுதி ஓகர், சவுதி பின்லேடன் மற்றும் சாத் குரூப் ஆகிய மூன்று நிறுவனங்களில் கட்டட வேலைகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
‘‘திரும்பி வந்துவிடுங்கள்!’’
சவுதியில் வேலை பறிபோன இந்தியர்களிடம், “உடனடியாக நாட்டுக்குத் திரும்பி வந்துவிடுங்கள். நீங்கள் திரும்பி வருவதற்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும். உங்களுக்கான சம்பள பாக்கியை விரைவில் திரும்பப் பெற்றுத் தருவோம். அதற்காக அங்கேயே காத்துக்கொண்டிருக்காதீர்கள்” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். சவுதி அரேபியா அரசுடன், நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியர்களுடைய வேலைக்கும், அவர்களின் ஊதியத்துக்கும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என்பதைக் காரணமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலை!
சவுதி அரேபியாவில் இந்தியர்களுக்கு வேலை மட்டும் பறிபோகவில்லை. அவர்களுடைய வாழ்வாதாரமும் பறிபோயிருக்கிறது. ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்துக்கொண்டு இருக்கின்றனர். பல மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்தியத் தூதரகத்தின் சார்பில் அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், அவர்களில் பெரும்பாலானோருக்கு ‘நோ அப்ஜெக்ஷன் சர்டிஃபிகேட்’ அவர்கள் பணிபுரிந்த நிறுவனங்களிலிருந்து தரப்படாததால், இந்தியாவுக்குத் திரும்பி வரவும் முடியாத நிலை உள்ளது. ஆனால், தற்போது இந்த சர்டிஃபிகேட் இல்லாதவர்களுக்கும் எக்ஸிட் விசா தருவதற்கு சவுதி அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
‘‘பணத்துக்காகக் காத்திராமல் திரும்பி வந்துவிடுங்கள்’’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்வது பாதுகாப்பு மற்றும் சட்ட நடைமுறையில் சரியான முடிவாக இருந்தாலும்கூட, அப்படி யாரோ ஒருவருக்காகச் சொந்தங்களை விட்டுவிட்டு கடல் கடந்துபோய் வேலை செய்தது, நமக்கான பணத்தை வாங்காமல் திரும்பி வருவதற்காகவா?
அவர்களுடைய சொந்தங்கள் அவர்களுக்காகக் காத்திருப்பார்கள். அவர்கள் கொண்டுவரும் பணத்தைவைத்து வீடு கட்டலாம்; திருமணம் செய்யலாம்; மகன், மகளுடைய படிப்புக்குச் செலவு செய்யலாம்; கடனை அடைக்கலாம் என்றெல்லாம் கனவு கண்டுகொண்டிருப்பார்கள். அவர்களை வெறுங்கையோடு வரச் சொன்னால் என்ன செய்வார்கள்? மேலும் இங்கு வந்து என்ன வேலை செய்வார்கள்? அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு என்ன உறுதி?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.