Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 5, 2016

'மதுவிலக்கை அமல்படுத்தியே தீருவேன்..!' - முதல்வர் ஜெயலலிதா உறுதி


''தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்'' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று,  மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு இன்று பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, " 2007ல் அன்றைய முதல்வர் கருணாநிதி,  'தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க முடியாது'  என்றார். 1971ல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது, தமிழகத்தில் மதுவிலக்கு நீக்கப்பட்டது. பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோது அதனை தளர்த்தியது திமுகதான். இந்த தகவல் இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியாது. அமைச்சர் அதை விளக்கித் கூற வேண்டும். முதல்வர் என்ற முறையில், மதுவிலக்கு குறித்து விளக்க வேண்டும் என அமைச்சருக்கு அறிவுரை கூறினேன்.

மதுவிலக்கு, கச்சத்தீவு பிரச்னை குறித்துப் பேசினால் எதிர்க்கட்சியினர் அவர்களாகவே வெளியேறி விடுகிறார்கள். சபாநாயகர் பணியை நான் மிகவும் எளிதாக்கிவிட்டேன். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். அதன் காரணமாகவே 500 கடைகள் மூடப்பட்டது. சில்லறை மதுபான விற்பனைக்கடைகளில் 2 மணி நேர விற்பனை நேரம் குறைக்கப்பட்டது" என்று கூறினார்.

இதனிடையே, முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், " சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். முதல்வர் பேச்சுக்கு பதில் அளிக்க அனுமதி கேட்டதற்கு, சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். சட்டப்பேரவையில் மதுவிலக்கு  குறித்து நாள் முழுவதும் விவாதம் நடத்த திமுக தயார். ஆளுங்கட்சி விவாதத்தில் பங்கேற்க தயாரா " என்று சவால் விடுத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.