Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 29, 2016

கசப்பான பாகற்காயின் இனிப்பான நன்மை!


கசப்புச் சுவையுள்ள பாகற்காய் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஆரோக்கியத்தில் அக்கறையுள்ள அனைவரும் பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொடி வகையைச் சேர்ந்த பாகற்காயில் கால்சியம், பாஸ்பரஸ், புரதம், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, தாது உப்புகள், பி காம்ப்ளெக்ஸ், நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் சிறிதளவு வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன.

பாகற்காயை தினமும் உணவாக உட்கொண்டால், சருமத்தில் உள்ள பருக்கள், கறுப்புத் தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் போன்றவை நீங்கும்.

இன்சுலின் வேதிப்பொருள் பாகற்காயில் உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. இதை பாகற்  காயின் இனிப்பான நன்மை என்றே கூறலாம்.

சுவாசக் கோளாறுகளான ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற நோய்களைத் தீர்க்கும் சிறந்த நிவாரணியாக பாகல் உள்ளது.

பாகற்காயின் சாறை தினந்தோறும் குடித்துவந்தால் கல்லீரல் வலுப்படும், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.

பாகற்காய் மற்றும் அதன் இலைகளை சூடான தண்ணீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் அது மிகவும் செரிமானத்துக்கு உதவுகிறது, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் பாகற்காய் பயன்படுகிறது.

பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீக்கப்பட்டு, இதய நோய் வருவதைத் தடுக்கும்.

நம் உடம்பில் புற்றுநோய்ச் செல்கள் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது.

உடலின்  வளர்சிதை மாற்றத்தைச் சரிசெய்யும் ஆன்டிஆக்சிடன்டுகள் பாகற்காயில் அதிக அளவு உள்ளன. எனவே இது உடலின் செரிமான மண்டலத்தைத் தூண்டி, நல்ல செரிமானத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.

மாதவிடாய் ஒழுங்கின்மையைச் சரிப்படுத்த பாகற்காய் உதவுகிறது. பாகல் இலைச்சாறுடன் நல்லெண்ணைய் கலந்து உட்கொண்டால் காலரா நீங்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.