August 16, 2016
நண்பர்களுடன் புதுச்சேரி வந்த IT இளம்பெண்ணுக்கு சராமரி அடி, உதை!
வீட்டில் பிக்னிக் செல்வதாகக் கூறிவிட்டு, நண்பர்களின் பிறந்தநாளைக் கொண்டாட புதுச்சேரிக்கு வந்த சென்னை இளம்பெண், அவரது உறவினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மணலியைச் சேர்ந்தவர் ரம்யா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரது பிறந்த நாளை புதுச்சேரியில் கொண்டாட அங்கிருந்தவர்கள் முடிவெடுத்திருக்கின்றனர். இதில் கலந்துகொள்ள முடிவெடுத்த ரம்யாவும், தனது வீட்டிலிருந்து கிளம்பி நண்பர்களுடன் காரில் புதுச்சேரிக்கு கிளம்பி இருக்கிறார். இதனைப் பார்த்த ரம்யாவின் உறவினர் ஒருவர், ரம்யாவின் செல்போனுக்கு போன் செய்து, 'எங்கே இருக்கிறாய்?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரம்யா, 'நான் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன்' என்று சொல்லி இருக்கிறார்.
இதில் ரம்யா மீது உறவினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, ரம்யாவிற்கு தெரியாமல் தனது இருசக்கர வாகனத்தில் அந்த உறவினர், ரம்யா சென்ற காரை அவருக்கு தெரியாமல் பின் தொடர்ந்திருக்கிறார். ரம்யா சென்ற கார், புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே உள்ள சிக்னலில் திரும்பி நின்றிருக்கிறது. அப்போது, பின் தொடர்ந்து வந்த உறவினர், மீண்டும் ரம்யாவிற்கு போன் செய்து, 'நீ எங்கே இருக்கிறாய்?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரம்யா அப்போதும், உண்மையை கூறாமல் தான் அலுவலகத்தில் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.
இதில் ஆத்திரம் அடைந்த உறவினர், உடனே தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி ரம்யா இருக்கும் காருக்கு அருகில் சென்று, தனது ஹெல்மெட்டால் அந்த கார் கண்ணாடியை உடைத்ததோடு, காரின் கதவைத் திறந்து ரம்யாவை கீழே இழுத்துப்போட்டு, ''பொய் சொல்லிவிட்டு ஊரை சுற்றுகிறாயா?' என்று கூறியபடியே கடுமையாக தாக்கியிருக்கிறார். அப்போது ரம்யாவின் நண்பர்கள் தடுத்தும், அவர் விடாமல் ரம்யாவை தாக்கி இருக்கிறார்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு உடனே அங்கு வந்த காவல்துறையினர், அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது, ரம்யாவை தாக்கிய நபர், ரம்யாவின் மாமா உறவுமுறை என்று தெரிய வந்திருக்கிறது. மேலும், தனக்கு ரம்யாவை திருமணம் செய்து வைப்பதாக ரம்யாவின் பெற்றோர்கள் தன்னிடம் தெரிவித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.
ஆனால் ரம்யாவின் பெற்றோர்களிடம் இதுகுறித்துப் பேசிய காவல்துறையினரிடம், ரம்யா தங்களிடம் பிக்னிக் போகிறேன் என்று தெரிவித்துவிட்டுத்தான் சென்றார் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர். அதே சமயம், அந்த உறவினரின் தொல்லை தாங்காமலே தான் உண்மையை மறைத்ததாகவும், நண்பர்களுடன்தான் மீண்டும் சென்னை செல்வேன் என்றும் ரம்யா கூறவே, அப்படியே போலீசாரும் அனுப்பி வைத்திருக்கின்றனர்.
நண்பர்களுடன் புதுச்சேரி வந்த IT இளம்பெண்ணுக்கு சராமரி அடி, உதை!
Reviewed by மறத்தமிழன்
on
August 16, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.