வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடங்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட இரோம் சர்மிளா, அரசியலில் இறங்குவதையொட்டி இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளாவின் சகோதரர் இரோம் சிங்காஜித், ''சிறை மருத்துவமனையில் 16 வருடங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை எனது சகோதரி மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய உண்ணாவிரத முடிவை அவர் கைவிட உள்ள நிலையில், அவர் நீதித்துறை குற்றவியல் நடுவரிடம் ஆஜர்படுத்தப்படுவார். பின்னர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்யும்.
இதையடுத்து அவரின் ஏராளமான ஆதரவாளர்களும், பெண் செயல்பாட்டாளர்களும் அவரின் புதிய பயணத்தை ஒட்டி, அவரைச் சந்திக்க உள்ளனர். ஆனால் ஷர்மிளாவின் 84 வயது தாய் ஷகி தேவி அவரை சந்திக்கச் செல்லவில்லை. அவர் ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை நீக்கப்படும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
ஜூலை 26-ம் தேதியில் இருந்து அவரை எங்கள் குடும்பத்தாரோ, ஆதரவாளர்களோ சந்திக்க முடியவில்லை. அதனால் அவர் வெளியே வந்த பிறகு எங்கே தங்குவார் என்று தெரியவில்லை. அதே நேரம் அவர் எங்களோடு தங்க ஆசைப்பட்டால், நாங்கள் எப்போதும் அவரை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.
ஷர்மிளாவின் உள்ளூர் ஆதரவாளர் ஷேத்திரிமயும் ஒனில், அரசு விதிகளின்படி ஷர்மிளாவைச் சந்திக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு முன்பாகவே அனுமதி பெறவேண்டும் என்றும் அதனால் ஷர்மிளாவைக் காண்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஷர்மிளாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், "விடுதலைக்குப் பிறகு சில நாட்களுக்கு ஷர்மிளா, திரவ உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். 16 வருட தொடர் உண்ணாவிரதத்தின் காரணமாக அவரால், உடனடியாக திட உணவுகளை எடுக்க இயலாது. அவரின் உடல்நிலை இப்போது சீராக உள்ளது" என்று தெரிவித்தனர்.
உண்ணாவிரதப் பின்னணி
மணிப்பூரில் 2000-ம் ஆண்டில் போலீஸ் வாகன அணிவகுப்பின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி பாதுகாப்பு படை வீரர்கள் பொதுமக்களை துன்புறுத்துவதால், உடனடியாக சட்டத்தை நீக்க வேண்டும் எனக்கோரி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.