உலகில் ஒவ்வொருவரும் ஒருவிதம். அதில் ஆஸ்திரேலியாவில் வாழும் இளம்பெண் பெக்கி சர்ரோக் புதுவிதம். தன்னுடைய வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவரும் மறப்பதில்லை. இது அவருக்கு வரமா அல்லது சாபமா என்று தெரியவில்லை. அவருடைய ஸ்பெஷாலிட்டி 'ஹாரி பாட்டர்'. ஆம், 'ஹாரி பாட்டர்' புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு வரியையும் அப்படியே அவர் மனப்பாடமாக ஒப்புவிக்கிறார்.
அவர் குறித்த தகவல்கள் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருப்பதாக அவரிடம் பழகிப்பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இளம்பெண் பெக்கி சர்ரோக்கிடம், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது அவர் ஹாரி பாட்டர் புத்தகத்தை கரைத்து குடித்தது போல வரி மாறாமல் சொல்லி இருக்கிறார் பெக்கி சர்ரோக். இதைக்கேட்டு பேட்டி எடுத்தவர் திகைத்துப் போய் விட்டார். இதன் பிறகே அவரது புகழ் பிரபலமடைந்திருக்கிறது.

யார் இந்த பெக்கி சர்ரோக்?
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த பெக்கி சர்ரோக்கிற்கு ஹைலி சுப்பீரியர் ஆட்டோபயா கிராபிகல் மெமரி (ஹெச்எஸ்ஏஎம்) என்ற வித்தியாசமான நோயால் இருப்பதால்தான் இப்படி தன் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாக நினைவு வைத்திருக்கிறார் என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது 26 வயதாகும் சர்ரோக், 'ஹாரி பாட்டர்' புத்தகத்தின் தீவிர ரசிகை. ஹாரிபாட்டர் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள வரிகளை, வார்த்தை மாறாமல் அப்படியே சொல்லி கேட்பவர்களை திக்குமுக்காட வைக்கிறார்.
அந்த புத்தகத்தில், ஒரு வரியை படித்தால் அதன் பிறகு உள்ள அனைத்தையும் அப்படியே அவர் சொல்கிறார். 17-வது அத்தியாயம் எனச் சொன்னதும் அதனை முதல் வார்த்தையிலிருந்து வார்த்தை மாறாமல் அப்படியே ஒப்புவிக்கிறார். ஹாரி பாட்டரின் முதல் பாகம் மட்டுமல்ல, 7 புத்தகங்களையும் அப்படியே ஒப்புவிக்க அவரால் முடிகிறது.
ஒரு தமிழ் சினிமாவில் நடிகர் விவேக்குக்கு அடுத்தவர்கள் மனதில் நினைப்பது தெரிவதைப் போல, எந்திரன் படத்தில் நடிகை ஐஸ்வர்யராய்க்கு உதவும் ரோபா ரஜினி போல, நிஜ உலகில் 'ஹாரிபாட்டர்' பெக்கி சர்ரோக் வித்தியாசமான பெண்மணியாக வாழ்ந்து வாழ்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.