Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 30, 2016

ஒற்றைப் பந்தில் தொடரை இழந்தது இந்தியா!


அமெரிக்காவில் இந்தியா- மே.இ.தீவுகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதத்தில் போட்டிகள் அங்கு நடத்தப்பட்டன. முதல் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்தியா, முதலில் பந்துவீச்சை தேந்தெடுத்தது, நேற்றைய போட்டியில் ஒரே ஓவரில் 32 ரன்களை வாரி வழங்கிய பின்னி நீக்கப்பட்டு அமித் மிஸ்ரா அணியில் சேர்க்கப்பட்டார். மே.இ.தீவுகள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. செயற்கைகோளில் பதிவேற்றம் செய்யும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆட்டம்  40 நிமிடம் தாமதமாக துவங்கப்பட்டது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த மே.இ.தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 143 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், பூம்ராஹ், அஸ்வின், ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.



இந்திய அணி 144 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. 2 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஒருவேளை தொழிநுட்ப கோளாறு இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா 5 ஓவர்கள் வரை பேட் செய்திருக்கும். 5 ஓவருக்கு டக்வெர்த் லீவிஸ் இந்தியாவின் வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்கள் வெறும் 28 ரன்கள் தான். இதனை இந்தியா எளிதாக எட்டியிருக்கும். மழை மற்றும் தொழில்நுட்ப கோளாறால் தொடரை இழந்தது இந்தியா. இந்த போட்டியை பார்க்க 200 டாலர் கட்டணம் செலுத்தி பார்க்க வந்த அமெரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். முதல் போட்டியில் கடைசி பந்தில் இந்தியா 2 ரன்களை எடுத்திருந்தால் தொடரை வென்றிருக்கும். இந்தியாவின் தொடர் தோல்வியை ஒற்றை பந்து நிர்ணயித்துவிட்டது. இது தான் 2016ல் இந்தியாவின் கடைசி டி20 போட்டி.

இந்தியாவுக்கு அடுத்த டி20 போட்டி என்பது இனி ஜனவரி 26,2017-ல் தான் அதுவரை இந்தியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தான் ஆடுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.