திருமணத்துக்கு முன்பு மண மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் கவுன்சலிங் நடத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதயநோய், புற்றுநோய் இருப் பதை மறைத்து தம்மை திருமண செய்து கொண்ட கணவனிட மிருந்து விவாகரத்து வழங்கக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஓர் இளம்பெண் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் தன்னுடன் சேர்ந்து வாழ மனைவிக்கு உத்தரவிடக்கோரி அவளது கணவர் வேறொரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்நிலையில் இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கக் கோரி அந்தப் பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இருவரும் நன்கு படித்தவர்கள். திருமணம் முடித்து சில மாதங்களிலே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். திருமணம் முடிந்து தேனிலவுக்குப் போனபோதுதான் கணவர் நோய் வாய்ப்பட்டவர் என அந்தப் பெண்ணுக்கு தெரியவருகிறது. ஏராளமான கனவுகளுடன் திருமண பந்தத்துக்குள் நுழைந்த அப் பெண்ணுக்கு ஏமாற்றம் ஏற்பட் டிருக்கிறது. பிறகு மருத்துவப் பரிசோதனை செய்தபோதுதான் அவளது கணவனுக்கு இதயத்தில் ஓட்டையும், காலில் தொடைப் பகுதியில் புற்றுநோயும் இருப்பது தெரியவந்துள்ளது.
இனிமேலும் அவரால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்று உறுதியாக தெரிந்த பிறகு வேறுவழியில் லாமல் விவாகரத்து முடிவுக்கு வந்த அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
இதய நோய் மற்றும் புற்றுநோய் இருப் பதை மறைத்து திருமணம் செய்து கொண்டதால் அந்த திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரியுள்ளார்.
அவளது கணவருக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவருகிறது. இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அந்தப் பெண்ணுக்கு அநீதி இழைக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு அவரது மனு ஏற்கப்பட்டு, அந்த திருமணம் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. அவளது கணவர் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
எனவே, திருமணத்துக்கு முன்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் கவுன்சலிங் நடத்த வேண்டியதன் முக்கியத் துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்களில் விளம்பரம், குறும்படம், கல்லூரி களில் கருத்தரங்கம் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி என்.கிருபா கரன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.