Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 29, 2016

பேரவையில் மக்கள் பிரச்னையை பேசினால் வெளியேற்றுகிறார்கள்! - துரைமுருகன் வேதனை


தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையை பேசினால் வெளியேற்றுகிறார்கள் என்று துரைமுருகன் வேதனை தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 தி.மு.க. உறுப்பினர்களை சட்டமன்றத் தலைவர் தனபால் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதை தொடர்ந்து, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ‘தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் விழுப்புரம் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.

இதில், தி.மு.க. தலைமை கழக முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசும்போது, ''தமிழகத்திலேயே அதிகமாக கரும்பு விளையும் மாவட்டம் விழுப்புரம் மாவட்டமாகும்.

இங்கு 28.3 சதவீதம் கரும்பு விளைகிறது. ஆனால் கடந்த முறை பயிர் செய்த கரும்புக்கே உரிய பணம் கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளனர். இதுபற்றித்தான் சட்டசபையில் பொன்முடி கேட்டார். அதற்கு சபாநாயகர் கரும்பு பற்றி நீங்கள் பேசக்கூடாது என்று சொல்கிறார்.



எதிர்கட்சி என்கிறவன் கேள்வி என்ற வாளை ஏந்தி வருவான். அதை ஆளும் கட்சியினர் கேடயம் என்கிற பதிலால் தாங்க வேண்டும். ஆனால் சட்டசபையில் அப்படி நடப்பதில்லை. நாங்கள் தவறு செய்து வெளியேறவில்லை. மக்கள் பிரச்னைக்காக, அவர்களின் கோரிக்கைகளை நியாயமாகதான் சட்டசபையில் கேட்கிறோம். ஆனால், எங்களை அவையில் இருந்து வெளியேற்றுகிறார்கள். இதற்கு சபாநாயகர் உடந்தையாக இருக்கிறார்.

தற்போதைய சபாநாயகருக்கு, சபாநாயகருக்கான அனுபவம் 1½ வருடம் தான். ஆனால், எனக்கு 44 வருடம் அனுபவமாகும். நான் 40 பட்ஜெட்டில், 34 போலீஸ் மானிய கோரிக்கையில் பேசி இருக்கிறேன். எதிர்கட்சி தலைவர் என்பவர் அமைச்சர் அந்தஸ்துக்கு உள்ளவர் ஆவார். ஆனால், இங்கு எதிர்கட்சி தலைவரை குண்டு கட்டாக தூக்கி சபையில் இருந்து வெளியேற்றுகிறார்கள். இதுதான் ஜனநாயகமா? நீங்களா ஜனநாயகத்தை காப்பாற்ற போகிறீர்கள்?.

சட்டசபையில் நான் தனியாக பேசினேன் என்கிறார் ஜெயலலிதா. மேலும், கருணாநிதி சட்டசபைக்கு வரமுடியுமா? என்று கேட்கிறார். தற்போது எங்கள் தலைவர் கருணாநிதிக்கு 94 வயதாகிறது. அப்படியே அவர் வந்து பேசினாலும், அவரை கண்ணியமாக நடத்தி வெளியே அனுப்ப மாட்டீர்கள். நாங்கள் யாரையும் புண்படுத்தவில்லை, கேலி செய்யவில்லை. மக்கள் பிரச்னைக்காக தான் போராடி வருகிறோம். ஜனநாயகத்துக்காக தான் பேசி வருகிறோம்.

நாம் எப்படி ஆண்டாலும் மக்கள் நம்மை ஆட்சிக்கு கொண்டு வருவார்கள் என்கிற முடிவுக்கு அ.தி.மு.க.வினர் வந்து விட்டனர். சட்டசபை என்பது மரியாதைக்குரிய பொருளாக காட்டப்பட வில்லை. எதிர்க்கட்சி என்று ஒன்று இருந்தால் தான் ஜனநாயகமாகும். அது இல்லாவிட்டால் சர்வாதிகாரமாகும். எதிர்கட்சியே இருக்க கூடாது என்று ஆளுங்கட்சியினர் கருதுகிறார்கள்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.