Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 9, 2016

தேனிலவுக்கு தனியே சென்ற கணவர்... வெளியுறவுத் துறையை உலுக்கிய ட்விட்!


டெல்லியை சேர்ந்தவர் ஃபைஷன் பட்டேல். இவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இதையடுத்து, ஐரோப்பிய நாடுகளுக்கு ஹனிமூன் செல்ல மனைவியுடன் திட்டமிட்டார். ஆகஸ்ட் 8 ம் தேதிக்கு ( நேற்று) டிக்கெட்டுகள் கூட புக் செய்தாகி விட்டது. பயணத்துக்கு தயாரான நிலையில், ஃபைஷான் பட்டேலின் மனைவி சானாவின் பாஸ்போர்ட் காணாமல் போய் விட்டது.


இந்த மாதிரியான சூழ்நிலையில், பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து விடுவார்கள். ஆனால் ஃபைஷான்  விமானத்தின் டிக்கெட்டை ரத்து செய்யவில்லை. அதே விமானத்தில்  ஃபைஷான் ஏறினார். தனது இருக்கைக்கு அடுத்த சீட்டில்,  மனைவியின் புகைப்படத்தை ஒட்டினார். பின்னர் அதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் ''இப்படிதான் நான் எனது தேனிலவுக்காக பயணிக்கிறேன்.'' என பதிவிட்டார். அந்த புகைப்படம் வெளியுறவுத்துறையை புரட்டிப் போட்டு விட்டது.

உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் இருந்து  ஃபைஷானின் ட்விட்டுக்கு பதில் கிடைத்தது.'' உங்கள் மனைவியை உடனடியாக என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள், அவர் உங்கள் இருக்கையின் அருகே இருப்பார்'' என சுஷ்மா அதில் கூறியிருந்தார். பின்னர் அடுத்த ட்வீட்டில்'', நாளையே உங்கள் மனைவிக்கு டூப்ளிகேட் பாஸ்போட் வழங்கப்பட்டு விடும் ''என்றும் தெரிவித்திருந்தார்.

அதன்படியே டூப்ளிகேட் பாஸ்போர்ட் சானாவிடம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் சானா, தேனிலவுக்கு சென்று சேர்ந்தாரா என இதுவரை தகவல் இல்லை.

மத்திய அமைச்சர்களில் சோஷியல் மீடியா வழியாக உதவி கேட்பவர்களுக்கு உதவுவதில், சுஷ்மாவும் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவும் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.