உலக சுகாதார நிறுவனம் 2013 ம் ஆண்டு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில், 231,000 மக்கள் சாலை விபத்துக்களால் இறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ம் ஆண்டு 550 பேர் சாலையில் நடமாடும் கால்நடைகள் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தினால் உயிரிழந்துள்ளனர் என்கிறது சாலை போக்குவரத்துக் கழகம்.
இதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என ஒரு புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது மத்திய பிரதேச அரசு.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த போலீஸார் சாலைகளில் திரிந்துகொண்டிருக்கும் மாடுகள் மூலமாக நடக்கும் விபத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக மாட்டின் கொம்புகளில் ஆரஞ்ச் கலர் ஸ்ட்ரிப்ஸ்களை ஒட்டிவிடுகின்றனர்.
இந்த ஸ்ட்ரிப்பானது இரவு நேரத்தில் ஒளிரும் தன்மையைக் கொண்டுள்ளதால் இரவு நேரத்தில் பயணம் செய்பவர்கள் விபத்தினை ஏற்படுத்தாமல் விலகி செல்ல முடியும்.
இதுகுறித்து, மத்தியபிரதேசம் பாலஹாட்டை சேர்ந்த போக்குவரத்து காவலர் கைலாஷ் சவுஹான் கூறும் போது, ''நிறைய வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி காயமடைகிறார்கள். கூடவே, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளும் வாகனங்கள் மோதி காயமடைகின்றன. ஒவ்வொரு மாதத்திலும் இது போன்ற பெரிய அளவிலான விபத்துகள் நடக்கினறன. இதை உடனடியாகத் தடுக்கும் விதமாக இந்த ஸ்ட்ரிப்களை மாடுகளின் கொம்புகளில் ஒட்டுகிறோம். அதிகப்படியாக விபத்து ஏற்படும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு இப்படி செய்கிறோம்' என்றார்.
இந்த ஸ்ட்ரிப் ஐடியாவானது நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதால், இனி சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளில் நிரந்தர சோடியம் பெயிண்ட் அடிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நம்ம ஊருக்கு எப்போ வரும்.....!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.