Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 26, 2016

நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?


நல்லதையே நினைப்போம்... நல்லதையே செய்வோம்...நல்லதே நடக்கும்...

எனப் பொதுவாக பெரியவர்கள் சொல்வார்கள். ஒருவனின் எண்ணத்தை பொறுத்து தான் அவனின் வாழ்க்கை அமையும். நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் சரி, வாழ்வில் நீங்கள் உயர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமெனில் உங்களுக்கு மிக மிக அத்தியாவசியமானது நேர்மறை எண்ணம் . எந்தவொரு   விஷயத்தையும் நேர்மறை எண்ணத்தோடும், புத்திசாலித்தனத்தோடும் அணுகிப்பாருங்கள்  உங்களை வெற்றி தேவதை தொற்றிக்கொள்ளும்.

1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள் 

நம்மைச்  சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

ஒரு சின்ன டெஸ்ட்:

1.  ராஜனிடம் ஒரு வேலையை கொடுத்தால் அறிவார்ந்து யோசித்து அதில் பாசிட்டிவ் என்ன, நெகட்டிவ் என்ன என்பதை ஆராய்ந்து நேர்மறையோடு எண்ணத்தோடு களத்தில் இறங்குவார்.

2.  தனசேகரன் எந்த விஷயமாக இருந்தாலும் பாசிட்டிவ், நெகட்டிவ் பற்றி யோசிக்காமல்  தட்றோம்டா, தூக்குறோம்டா என களத்தில் இறங்குவார்.

3.கஜேந்திரனிடம்  எந்த வேலையைச் சொன்னாலும், அதன் நெகட்டிவ் அம்சங்களை மட்டுமே சொல்லி, கொஞ்சம் கூட முயற்சிக்காமல் தட்டிக்கழிப்பார்.

இந்த மூவரில் யாரை உங்களது நண்பராக தேர்ந்தெடுக்க போகிறீர்கள்? ராஜனை தேர்ந்தெடுத்தால் தான் நீங்கள் புத்திசாலி. உங்களுடன் எப்போதும், நீங்கள் எதைச் செய்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நண்பர்களை வைத்துக் கொள்ளாதீர்கள், அதே சமயம் நெகட்டிவ் மைண்ட்செட் இருப்பவர்களும் வேண்டாமே!



2) உற்சாகமாக இருங்கள் :-

சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.



3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : -

உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும்  தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.



4. லவ் பண்ணுங்க :-

உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில்  தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள். உங்களின் முதல் காதலியோ, காதலனோ  நீங்களாகவே இருங்கள். உங்களை நீங்களே வெறுக்காதீர்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள். உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.



5.  பயணப்படுங்கள் :- 

வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.  இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு  தாமதமாக வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.  வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும். அடுத்த ஐந்தாண்டுக்குள் நீங்கள் லட்சாதிபதியாக வேண்டுமானாலும் சரி, எவெரெஸ்ட் உயரம் செல்ல வேண்டுமென்றாலும் சரி, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் ஆசை இருந்தாலும் சரி. எல்லாமே சாத்தியம் தான்.  இது எல்லாமே நிச்சயம் நடக்கத்தான் போகிறது. அதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்  மூன்று விஷயங்கள் தான்.

1. நேர்மறை எண்ணத்தோடு அணுகுங்கள்

2. திட்டமிட்டு செயல்படுங்கள்

3. முழு உழைப்பை கொட்டுங்கள்.

வாழ்த்துகள் பாஸ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.