ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், புதிய சாதனை படைத்து இருக்கிறார் இந்தியாவின் தீபா கர்மகர்.
ரியோ டி ஜெனீரோவில், ரியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதில், முதல் தங்கப் பதக்கத்தை வெல்லப் போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை அமெரிக்கா தட்டி சென்றுள்ளது.
இந்நிலையில், ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், புதிய சாதனை படைத்து இருக்கிறார் இந்தியாவின் தீபா கர்மகர். 52 ஆண்டுகளில், இந்தியா முதல் முறையாக வால்ட் போட்டியின் இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில், பங்கேற்கும் தீபா, தகுதி சுற்றில் எட்டாவது இடம் பிடித்து இருக்கிறார்.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீபா கரம்கர் தான், இந்தியா சார்பில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் தேர்வான முதல் பெண். அவர், ப்ரொடுனோவா (produnova) வால்ட் ஸ்டைலில் 14,850 புள்ளிகள் பெற்று அசத்தினார் தீபா. 5 சுற்று நடக்கும் போட்டியின், மூன்றாவது சுற்றில் அவர் ஆறாம் இடத்தில் இருந்தார். இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த ஷாலன் ஆல்சன் 14,950 புள்ளிகள் பெற, தீபா எட்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் சைமன் பைல்ஸ் 16,050 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் வட கொரியாவின் ஜாங் உன் ஹாங்கும் (15,683), மூன்றாம் இடத்தில் ஸ்விட்சர்லாந்தின் குய்லா ஸ்டெய்ன்க்ரூபரும் (15,266) உள்ளனர்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற காமென்வெல்த் போட்டிகளில், வெண்கலம் வென்றவர் தீபார் கர்மகர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டி வருகின்ற ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.15 மணிக்கு நடைபெற உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.