Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 8, 2016

'குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக விஜய் ருபானி பதவி ஏற்றார்!'


'குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக விஜய் ருபானி பதவி ஏற்றார்!'குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக விஜய் ருபானி, துணை முதல்வராக நிதின் பட்டேல் இன்று பதவி ஏற்று கொண்டனர் . குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் பட்டேல், கடந்த 1–ம் தேதி வயது முதிர்வு காரணமாக தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தார். அவரது ராஜினாமாவை, பா.ஜ.க. தலைமை ஏற்றுக் கொண்டது.  புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதல்வராக விஜய் ருபானியும், துணை முதல்வராக நிதின் பட்டேலும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதனையடுத்து இருவரும் ஆட்சி அமைப்பதற்காக மாநில கவர்னர் ஓ.பி.கோலியை சந்தித்து நேற்று உரிமை கோரினர்.  கவர்னர் ஆட்சி அமைக்க அனுமதி வழங்கிதையடுத்து இன்று பிற்பகல் 12.40 மணியளவில் காந்தி நகரில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சராக விஜய் ருபானி, துணை முதல்வராக நிதின் பட்டேல் மற்றும் 24 அமைச்சர்களுக்கும் கவர்னர் ஓ.பி.கோஹ்லி பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதியும் செய்து வைத்தார்.   இந்த விழாவில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு, குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள விஜய் ருபானியையும், துணை முதல்வராக பதவி ஏற்ற நிதின் பட்டேல் மற்றும் பதவி ஏற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  பிரதமர் மோடி வாழ்த்து...  குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் ருபானி மற்றும் அவரது தலைமையில் அமையும் அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக விஜய் ருபானி, துணை முதல்வராக நிதின் பட்டேல் இன்று பதவி ஏற்று கொண்டனர்.

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் பட்டேல், கடந்த 1–ம் தேதி வயது முதிர்வு காரணமாக தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்தார். அவரது ராஜினாமாவை, பா.ஜ.க. தலைமை ஏற்றுக் கொண்டது.

புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதல்வராக விஜய் ருபானியும், துணை முதல்வராக நிதின் பட்டேலும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதனையடுத்து இருவரும் ஆட்சி அமைப்பதற்காக மாநில கவர்னர் ஓ.பி.கோலியை சந்தித்து நேற்று உரிமை கோரினர்.

கவர்னர் ஆட்சி அமைக்க அனுமதி வழங்கிதையடுத்து இன்று பிற்பகல் 12.40 மணியளவில் காந்தி நகரில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சராக விஜய் ருபானி, துணை முதல்வராக நிதின் பட்டேல் மற்றும் 24 அமைச்சர்களுக்கும் கவர்னர் ஓ.பி.கோஹ்லி பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதியும் செய்து வைத்தார்.


இந்த விழாவில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு, குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள விஜய் ருபானியையும், துணை முதல்வராக பதவி ஏற்ற நிதின் பட்டேல் மற்றும் பதவி ஏற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடி வாழ்த்து...

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் ருபானி மற்றும் அவரது தலைமையில் அமையும் அமைச்சரவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''குஜராத் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டிருக்கும் விஜய் ருபானி, துணை முதல்வராக பதவியேற்றிருக்கும் நிதின் படேல் ஆகியோருக்கும், புதிய அமைச்சரவையினருக்கும் குஜராத் மாநிலத்தைத் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல என் வாழ்த்துக்கள்" என்று ட்விட் செய்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.