Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 20, 2016

போட்டோ எப்ப சார் அனுப்புவீங்க? - போட்டோகிராஃபி ரவுசுகள்


நம் வாழ்க்கையில் நாம் கடந்துவந்த, மறு உருவாக்கம் செய்ய முடியாத பல தருணங்களை மனதில் மீண்டும் நிகழ்த்திக் காட்டுவதும், கண்முன்னால் வந்துபோக வைப்பதும் போட்டோக்கள்தான். ஆனால், அந்த ஒரு போட்டோவை எடுக்கிறதுக்குள்ள ஒரு போட்டோகிராஃபரை என்னவெல்லாம் கேட்டு எப்படியெல்லாம் டார்ச்சர் பண்றோம் தெரியுமா? என்னைத் தடுக்காதீங்க... இன்று உலகப் புகைப்பட தினம். உண்மையை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு...

போட்டோ எப்போ அனுப்புவீங்க?

* நம்மைத் தெரியாத்தனமா ஒரு போட்டோ எடுத்துடக் கூடாதே. உடனே, தினமும் போனைப் போட்டு 'போட்டோவை எப்போ அனுப்பி வைப்பே? அதைத்தான் புரொஃபைல் பிக்சரா வைக்கப்போறேன்'னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுடுவோம்.

என்கிட்ட செம ஐடியா இருக்கு!

* போட்டோகிராஃபர்கள் ராப்பகலா கடுங்காப்பி போட்டுக் குடிச்சு ஒரு ஐடியா யோசிச்சு வெச்சுருப்பாங்க. ஆனால், நாம காலங்காத்தால டீ குடிக்கப்போன இடத்தில் ஒட்டியிருந்த சினிமா போஸ்டரைப் பார்த்துவிட்டு 'என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. அதே மாதிரி எடுத்தால் சூப்பரா வரும்' எனக் குட்டையைக் குழப்புவோம்.

கேமரா சாவடியே இருக்கே ப்ரோ!

* மரம் மேல ஏறி, மல்லாக்கப் படுத்தெல்லாம் ஆங்கிள் செட் செய்து மாங்குனு மாங்குனு உழைச்சு போட்டோகிராஃபர்கள் போட்டோ எடுத்துக் கொடுத்தால், 'கேமரா செமையா இருக்கு ப்ரோ' என கேமராவை பாராட்டுவோம். ஏன் பாஸ், சாப்பாடு நல்லாயிருந்தால் அடுப்பையா பாராட்டுவோம்?



எடிட் செஞ்சு தர்றீங்களா?

* எடிட்டிங்கே தேவைப்படாத அளவுக்கு லைட் செட் செய்து எடுத்திருப்பார்கள் போட்டோகிராஃபர்கள். ஆனால், நாமோ 'கொஞ்சம் சேப்பு கலர் டோன்ல எடிட் பண்ணித் தர்றீகளா?' எனக் கேட்டு கிறங்கடிப்போம். நமக்கெல்லாம் சத்தியமா கும்பிபாகம்தான்.

ஒருவேலையும் இல்லை, பட்டனைத் தட்டினா போதும்!

* கேமராவை ஆன் செய்து க்ளிக் பட்டனைத் தட்டினாலே, போட்டோக்கள் 'படக்படக்'னு கொட்டும்னு நமக்கு நினைப்பு. பழசுதான் ஆனாலும் சொல்றேன், 'நினைப்புதான் பொழைப்பைக் கெடுக்குது'.

பேக் கிரவுண்ட் ஏன் மங்கலா இருக்கு?

* கேமராவில் ஃபோகஸ் செய்த இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்கள் மங்கலாதான் இருக்கும். அதுதானே புகைப்பட வழக்கம். அதைவிட்டுவிட்டு பின்னால் இருக்கிற ரோசாப்பூ செடி ஏன் மங்கலாத் தெரியுது?னு போட்டோகிராஃபர்கிட்ட சண்டைக்குப் போவோம்ல. கெரகத்த...

என்னைக் கொஞ்சம் நல்லா எடுடா...

* கருப்பா, குட்டையா, கனமா, சுருட்டைமுடியோட இருந்தால் போட்டோவில் சிங்கமுத்து மாதிரிதான் தெரியும். 'சிங்கம்' சூர்யா மாதிரி தெரியாது. ஆனால், நாமோ 'என்னை இன்னும் கொஞ்சம் கலரா எடுடா, என்ன போட்டோகிராஃபர் நீ?' என 'உச்' கொட்டுவோம்.

இது எல்லாத்தையும் கூட மன்னிச்சு விட்றலாம். ஆனால், கேட்கவே கூடாதுனா அது இதுதான்...

'போட்டோ எப்போ அனுப்புவ?'

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.