சென்னையில் நேற்று நடந்த சுதந்திரத் தின விழாவின் போது, முதலமைச்சர் ஜெயலலிதா 'மயான புத்ரி ' என்றே அழைக்கப்படும் நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்திக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கி கவுரவித்தார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள மின் மயானத்தில் சடலங்களை எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் இந்த ஜெயந்தி.

ஒரு நாளைக்கு 7 முதல் 8 சடலங்களை எரிக்கும் ஜெயந்திக்கு தற்போது வயது 40 ஆகிறது. பெண்களை மயானத்திற்கு வருவதற்கே தடைவிதிக்கு சமூகத்தின் தடைகளை தகர்த்து எறிந்து ,ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த இந்த பணியில் ஈடுபடுட்டு வரும் ஜெயந்தி, கல்பனா சாவ்லா விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர்தான். ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசுடன் சான்றிதழும் இந்த விருதுடன் வழங்கப்படும்.
விருது அறிவிக்கப்பட்ட, சில நாட்களில் ஜெயந்தியின் தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடந்த வாரத்தில், அவரது தாயார் இறந்து போனார். தாயாரின் உடலையும் தகனம் செய்து விட்டுதான், சுதந்திரத் தின நிகழ்ச்சிக்கு ஜெயந்தி வந்திருந்தார். துயரம் வழியும் கண்களோடு ஜெயந்தி கூறுகையில்,'' முதலில் ஒரு அனாதை விடுதியில் வேலை பார்த்து வந்தேன். பின்னர் இந்த பணி கிடைத்தது. கடந்த 2003ம் ஆண்டு எனது தந்தை இறந்தார். எங்கள் வீட்டில் அனைவரும் பெண்கள்தான். இதனால் உறவு வழி சகோதரர்கள்தான் எனது தந்தைக்கு சில மதச் சடங்குகளைச் செய்தனர். அப்போதே, எதையும் சுதந்திரமாக தனித்தன்மையுடன் செய்ய வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் தலை தூக்கி விட்டது.

இந்த பணியில் சேர அதுவும் ஒரு காரணம். இதுவும் மற்ற பணி போலத்தான் நான் கருதினேன். நான் வேறுப்படுத்திப் பார்க்கவில்லை. இதற்கும் பலத் தடைகள் வந்தது. எனக்குப் பின்னால் பேசுபவர்களைப் பற்றி யோசித்து பார்க்கக் கூட எனக்கு நேரமில்லை. என்னை எடுத்துக்காட்டாகக் கொண்டு ஜெயிப்பவர்களைப் பற்றித்தான் நான் யோசிக்கிறேன். நான் ஐயர் வகுப்பை சேர்ந்தவள். எனது கணவர் வேறு வகுப்பை சேர்ந்தவர். எங்களுக்குள் எந்த வேறுபாடு கிடையாது. எங்கள் திருமணமே பல தடைகளை சந்தித்தது. எனது கணவரேக் கூடத் தயங்கினார். ஆனால் எனது தந்தை எனக்கு ஆதரவாக இருந்தார். பின்னர் எனது கணவரும் ஒப்புக் கொண்டார். அதனால் கல்ணாயணத்துல ஜெயிச்சோம்.
இந்த வேலைக்கு வர கூட எனது கணவர் எந்தத் தடையும் சொல்லவில்லை. அவர் மட்டுமல்ல ,எனது மகள்கள் கூட மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இப்போது எனக்கு இந்த விருது கிடைச்சிருக்கு. எனது தாயார் உயிருடன் இருந்திருந்தால், அளவில்லாத சந்தோஷமடைந்திருப்பார். இந்த விருதை அவரிம் காட்டி மகிழும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல் போய் விட்டது..! ''
பழமைவாதத்துக்கு ஓய்வு கொடுத்துவிட்டார் ஜெயந்தி... வாழ்த்துக்கள்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.