Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 8, 2016

இந்தியாவிலேயே அதிக செலவு மிகுந்த நகரமாக மும்பை உள்ளதாக டிரிப்அட்வைசர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.


நாமக்கல் மகளிர் நீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், முறைகேட்டில் ஈடுபட்ட 4‌ பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ராசிபுரத்தைச் சேர்ந்த ஜெய்சித்ரா என்பவர், சொத்து பிரச்னையில் சாதகமாக தீர்ப்பு பெற வேண்டி, ஆத்தூரைச் சேர்ந்த சிலர் மூலம், அப்போதைய நாமக்கல் மாவட்ட நீதிபதி மான்விழிக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த புகார் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை விசாரணை நடத்தி, நீதிபதி மான்விழியை, கடந்த பிப்ரவரி மாதம் பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்த புகாரில், 4 பேரையும் கைது செய்தனர். நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் நால்வரையும், 15 நாள் காவலில் வைக்க நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார். இதையடுத்து, நான்கு பேரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.