இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 'ஸ்கர்ட்' அணிய வேண்டாம் என்று மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்து உள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உதவுவதற்காக 1363 என்ற உதவி எண் சேவையை அறிமுகம் செய்து வைத்த பின் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்திய விமான நிலையத்திற்கு வந்ததும், அவர்களுக்கு 'வெல்கமிங் கிட்' ஒன்று வழங்கப்படும். அதில், இந்தியாவில் இருக்கும்போது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை பட்டியலிட்டு அதன் விபரங்கள் இடம் பெற்று இருக்கும்.
இந்த பரிந்துரைகளில், குறிப்பாக அவர்கள் சிறிய நகரங்களுக்கு வந்தால், இரவில் தனியாக வெளியில் சுற்ற வேண்டாம். ஸ்கர்ட் போன்ற குட்டை பாவாடைகளை அணியக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவர்கள் பயணிக்கும் வாகனத்தின் நம்பர் பலகையையும் போட்டோ எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நம்பர் பலகை போட்டோவை அவர்கள், தங்கள் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.