Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 8, 2016

இந்திய சாலைகளிலும் சீன மெகா பஸ் போன்ற பேருந்துகள்: பிரதமர் மோடி ஆசை


சீனாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ள மெகா பஸ் போல இந்தியாவிலும் இயக்குவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயுமாறு அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் 22 மீட்டர் நீளம், 7.8 மீட்டர் அகலம் மற்றும் 4.8 மீட்டர் உயரம் கொண்ட மெகா பஸ்‌சின் சோதனை ஓட்டம், கடந்த 2ம்‌தேதி ஹெபீ மாகாணத்தில் நடந்தது. 40 சாதாரண பஸ்களின் அளவைக் கொண்ட இந்த பஸ் சாலையில் செல்லும்போது, அதன் அடியில் உள்ள இடைவெளியில் கார்கள் தடையின்றி கடந்து செல்ல முடியும்.

சாலையின் இருபுறங்களை மட்டுமே தொட்டுச் செல்லும் இந்த பஸ்சின் கீழ்ப்பகுதியில் வாகனங்கள் செல்லும் வகையில் பெரிய இடைவெளி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கூறப்படுகிறது. 300 பயணிகள் அமர்ந்தும், சுமார் ஆயிரம் பேர் நின்று கொண்டும் பயணிக்கக்கூடிய இந்த பஸ் குறித்து பிரதமர் மோடி ஆர்வமுடன் தகவல் அறிந்து கொண்டதாக டெல்லியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றிய கூடுதல் தகவல்களை கேட்டறிவதுடன், இந்தியாவிலும் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த பஸ்சை இயக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளை மோடி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.