Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 25, 2016

கொல்கத்தா பாடசாலை ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று....


அன்பார்ந்த பெற்றோர்களே!

உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.

எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுல்..
ஒரு கலைஞன் இருப்பான், அவனுக்கு கணிதம் தேவைப்படாது.

அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான், அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.
ஒரு இசைஞானி இருப்பான்,அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது. ஒரு விளையாட்டு வீரனிருப்பான்,அவனது உடல் நலனே முக்கியமன்றி
பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.

பரீட்சையில் அதிக புள்ளி எடுத்தால் சிறந்த பிள்ளை.. எடுக்காவிட்டால்..

தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையைப் பறித்து விடாதீர்கள்

.சொல்லுங்கள் அவர்களுக்கு இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.நீ வாழ்கையில் வெற்றி கொள்ளக்கூடிய இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் புள்ளியை வைத்து தீர்மானிப்பதில்லை.என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி செய்து பாருங்கள் பரீட்சையை வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.

வெறுமனே ஒரு பரீட்சை, அதன் புள்ளி உங்கள் பிள்ளையின் கனவை , திறமைகளை அழித்து விடக்கூடாது.

வைத்தியர்களும் பொருயியலாலர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.

உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.