Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 16, 2016

நிதி மோசடி வழக்கு... ராஜபக்சே மகன் மீண்டும் கைது


சட்ட விரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இலங்கையின் அதிபராக 10 ஆண்டு காலம் பதவி வகித்த ராஜபக்சே, கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். சிறிசேனா அதிபர் ஆனதை தொடர்ந்து, ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பத்தினர் செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அதன்படி, அவரும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ராஜபக்சேயின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டும் இவற்றில் அடங்கும். அவர் இரண்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததில் நடந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை பற்றி நிதி குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று நாமல் ராஜபக்சேயை நிதி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை வருகின்ற 22-ம் தேதி வரை சிறையில் அடைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாமல் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். கடந்த மாதம் அவர் ரூ.4,225 கோடி அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் நடைபெற்ற நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

இதில் 7 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் வெளிவந்தார்.  இதேபோல் ராஜபக்சேயின் தம்பியும், நாமல் ராஜபக்சேயின் சித்தப்பாவுமான பசில் ராஜபக்சே, 3 தடவை கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.