Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 1, 2016

குடிமகன்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி... சரக்கடிக்கிறது தான் வேலை..அதுக்கு சம்பளம் 43 லட்சம்!!


பீர் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி! பீர் அடித்தால் காசு கரையும் ஆனால் இங்கோ பீர் வகைகளை ருசிபார்த்து விமர்சித்து, தொகுப்பு கட்டுரை எழுதினால் ஆண்டுக்கு 64,650 டாலர் சம்பளம் தருகின்றார்களாம். இந்த வேலைக்காக லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எங்கே இந்த அதிசயம்? அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் தான். அங்குள்ள தேசிய அருங்காட்சியகம் சமீபத்தில் வேலைக்கான ஒரு பணியிடத்தை இணையதளத்தில் அறிவித்துள்ளது. அது என்னவென்றால், பீர் தயாரிப்பு மற்றும் உணவுப் பழக்கங்கள் போன்ற தகவல்களை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மதுபான ஆலைகளில் தயாராகும் பீர்வகைகளை ருசித்து பார்த்து ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் மூன்றாண்டு குத்தகையில் இந்த பணி நடைபெறும். இதற்கு ஆண்டு சம்பளமாக 64,650 டாலர்கள். இது இந்திய மதிப்பில் சுமார் 43 லட்சம் ரூபாய் சம்பளம்!!!!

இந்த வேலைக்கு பல நாடுகளில் இருந்து பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதிவரை இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம். சரக்கடிக்க சம்பளம் வாங்க போகும் அந்த அதிர்ஷ்டகாரர் எவரோ??

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.