Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 24, 2016

‘ஜவஹர்லால் நேரு தூக்கிலிடப்பட்டார்’ என்று சொன்னாரா மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர்...?


பி.ஜே.பி உறுப்பினர்கள் எங்காவது வித்தியாசமான வரலாற்றைச் சொல்லி சர்ச்சையில் மாட்டிக்கொள்வது அவர்களின் வாடிக்கை. அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்.

கடந்த திங்கட்கிழமை மத்தியப் பிரதேச மாநிலத்தின் சிந்துவாராவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஜவ்டேகர், ‘‘இந்திய சுதந்திரத்துக்கான போராட்டங்கள் 1857-ல் ஆரம்பித்தன. அந்தக் காலகட்டத்தில் சுதந்திரவேட்கை, மக்கள் போராட்டங்களை நோக்கித் திருப்பியது. 90 ஆண்டுகள் நீடித்த அந்தப் போராட்டத்தின் வழியே நம்மை ஆண்டு வந்த பிரிட்டிஷ் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. இந்த நேரத்தில் நமது சுதந்திரத்துக்குப் பாடுபட்ட தலைவர்களை நினைவுகூர வேண்டும். சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபபாய் படேல், ஜவஹர்லால் நேரு, பகத்சிங், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும்’’ என்று உணர்ச்சிபொங்க பேசினார்.

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய மோடி தனது பேச்சில், ‘‘இந்தியர்களிடையே சுதந்திரப் போராட்டம் குறித்த விழிப்பு உணர்வை மேம்படுத்த வேண்டும். அதன்மூலம் நாட்டுப்பற்று உயரும். அதற்குப் பல இடங்களில் கூட்டம் நடத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்காக நடத்தப்பட்ட விழாவில்தான் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இப்படிப் பேசி இருக்கிறார். இது, ஆங்கில மற்றும் வட நாட்டு ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம்பிடித்தது.

இந்த விவகாரம் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஜவ்டேகருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. தற்போது அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஜவ்டேகர் விளக்கம் அளித்து இருக்கிறார். அதில், ‘‘நேரு, சுபாஷ் சந்திரபோஸ், வல்லபபாய் படேல் ஆகியரோடு தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு போன்றோருக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டதாகவும், அது ஊடகங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும்’’ தெரிவித்து இருக்கிறார்.

பி.ஜே.பி தலைவர்கள் இதுபோல நடந்துகொள்வது முதல்முறை அல்ல. இதற்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி தனது பிரசாரத்தில், ‘‘சந்திரகுப்த மெளரியா, குப்தா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், உலகத்தையே வென்ற அலெக்ஸாண்டரை பிஹாரிகள் தோற்கடித்திருக்கிறார்கள்’’ என்றும் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.