Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 20, 2016

சிந்துவுக்கு முன்கூட்டியே வாழ்த்து சொன்னாரா கருணாநிதி?


ரியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பரிசு பெற்ற பி.வி.சிந்துவுக்கு, அடுத்த சில நிமிடங்களில் தமது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி, ''சிந்துவின் ஆட்டம் துல்லியமாக இருந்தது'' என்று கூறி இருந்தார்.

விளையாட்டுப் பிரியரான கருணாநிதி, தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளைத் தொடர்ந்து பார்த்துவருவது வழக்கம். இதைத்தான் ட்விட்டரில் இப்படிக் கூறி இருந்தார்.

"சிந்துவின் காலிறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகளை நான் தொலைக்காட்சியில் கண்டேன். அவரது ஆட்டம் மிகவும் துல்லியமாக அமைந்திருந்தது."இதுதான், அவர் ட்விட்டரில் போட்ட செய்தி. இதை அவர், 19-ம் தேதி இரவு சிந்து வெள்ளிப் பரிசு பெற்ற உடன் போட்டிருக்கிறார். ஆனால், ட்விட்டரில் 19-ம் தேதி காலை 9.13-க்கே கருணாநிதி வாழ்த்துச் சொன்னதுபோல நேரம் பதிவாகி இருக்கிறது.

இதனால், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர், 'சிந்து விளையாடத் தொடங்கும் முன்பே கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துவிட்டார்' என்று சர்ச்சையைக் கிளப்பிவிட்டனர். வாட்ஸ்அப்பில் காலை 9.13 என்று பதிவாகியிருந்ததை, சர்ச்சை கிளப்பிய நபர் இரவு 9.13 என தன்னுடைய வாட்ஸ்அப் கார்டில் மாற்றியிருக்கிறார். அதே நேரத்தில் ஃபேஸ்புக்கில் பி.வி.சிந்துவுக்கு கருணாநிதி விரிவாகப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அந்த ஃபேஸ்புக் பக்கத்தில், 15 மணிநேரத்துக்கு முன்பு அவர் பதிவுசெய்திருப்பதாக நேரம் அப்டேட் ஆகி இருக்கிறது. ஃபேஸ்புக்கில் இந்திய நேரத்தை அப்டேட் செய்திருக்கின்றனர்.





தி.மு.க தரப்பில் கருணாநிதியின் ட்விட்டர் தளத்தை அப்டேட் செய்யும் நவீனிடம் பேசினோம். ''19-ம் தேதி இரவுதான் இந்தப் பதிவு போடப்பட்டது. ஆனால், அதில் உள்ள சர்வதேச நேரம் காரணமாக இவ்வாறு நேரம் காட்டுகிறது. இந்த விமர்சனங்களை நாங்கள் பொருட்படுத்தப்போவதில்லை. வாட்ஸ்அப்பில் தலைவர் கலைஞரை விமர்சனம் செய்து பதிவுபோட்ட நபர் இப்போது இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்" என்றார்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.