என் மனைவியை எதிர்த்து போட்டியிட்டு மாயாவதி வெற்றி பெறுவாரா என்று தயாசங்கர் சிங் சவால் விடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவராக இருந்தவர் தயாசங்கர் சிங். இவர் சில நாட்களுக்கு முன், பகுஜன் சாமஜ் கட்சித் தலைவர் மாயாவதியை பற்றி, மிகவும் மோசமான வார்த்தைகளால் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். இது உத்தரபிரதேசத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. தயாசங்கர் சிங்கை பா.ஜ.க. உடனடியாக கட்சியை விட்டு நீக்கியது. மேலும், அவரைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தினார்கள்.
மேலும் மாயாவதி கட்சியினர், பதிலுக்கு தயாசங்கர் சிங்கின் தாயார், மனைவி, மகள் பற்றி மோசமாக விமர்சித்தார்கள். மாயாவதியும் தயாசங்கர் மனைவியைப் பற்றி விமர்சித்தார். இதையடுத்து மாயாவதி மீது தயாசங்கர் மனைவி போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே, தயாசங்கர் சிங் மீது உ.பி. போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இதனால் அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அது நிராகரிக்கப்பட்டதால் போலீசார் அவரை மாவ் மாவட்டத்தில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் அவர் ஜாமீன் பெற்று, தற்போது வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், லக்னோ திரும்பிய தயாசங்கர் சிங், இந்த விவகாரங்களுக்கு பின் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''மாயாவதி உத்தரபிரதேசத்தில் தனது கட்சிக்காரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தேர்தல் டிக்கெட் கொடுக்கிறார்.
இதுபற்றி நீதிமன்றத்தை அணுகி, சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோருவேன். வாக்குக்கு பணம் வாங்குவது தொடர்பான பிரச்னையில், நாடாளுமன்றக் குழு மூலம் பல சமயங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதுபோல் தேர்தலில் டிக்கெட்டுக்கு பணம் வாங்குவது பற்றி ஏன் விசாரணை நடத்தக் கூடாது.
வருகின்ற தேர்தலில் மாயாவதி, என் மனைவி ஸ்வாதி சிங்கை எதிர்த்து நின்று போட்டியிட்டு வெற்றி பெறுவாரா? இதை நான் அவருக்கு சவாலாக விடுக்கிறேன். மாயாவதி ஒவ்வொரு தேர்தலிலும் எம்.எல்.சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுத்தான் மாநில சட்டசபைக்கு வருகிறார்.
அவரால் தேர்தலில் நேரடியாக நிற்க முடியாது. எந்த தொகுதியில் நின்றாலும் மாயாவதியை எதிர்த்து எனது மனைவி சுயேச்சையாக போட்டியிடுவார். என் மனைவியை மாயாவதியால் தோற்கடிக்க முடியுமா? அவர் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட தயாரா" என்றார் ஆவேசமாக.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.