சென்னை ரயில் நிலையத்தில், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவோடு வந்தவர்கள் எழுப்பிய கோஷத்தைக் கண்டு அதிர்ந்துபோய், ரயில் நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார் சி.பி.ஐ கட்சியின் மகேந்திரன்.
பல்லாவரம் செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்திருந்தார் சி.பி.ஐ கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன். அப்போது பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் ஊருக்குப் போவதற்காக அங்கே வந்திருந்தார். அவர் வந்த தகவலை அறிந்ததுமே, ரயில் நிலைய அதிகாரிகளும் காவல்துறையினரும் குழுமிவிட்டனர். கூட்டம் கூடியதும், ' பாரத் மாதா கீ ஜே' என ரயில்நிலையம் அதிரும் அளவுக்குக் கோஷம் எழுப்பினர் பா.ஜ.க தொண்டர்கள். தொடர்ச்சியான கோஷத்தால் அதிர்ச்சியடைந்த மகேந்திரன்,
ரயில் நிலைய அதிகாரிகளிடம் சென்று, ' ஒரு ரயில் நிலையத்தில் இவ்வாறு கோஷம் எழுப்புவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் மத அடையாளத்தோடு சிலர் முழக்கம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஓர் அமைச்சருக்கு கொடுக்க வேண்டிய அளவுக்கு அவருக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்கிறீர்கள். என்ன நடக்கிறது இங்கே? இது ரயில் நிலையமா... இல்லை பா.ஜ.க அலுவலகமா' என வாக்குவாதம் செய்திருக்கிறார். அவரை ரயில் நிலைய அதிகாரிகள் சமாதானப்படுத்தியுள்ளனர்.
மகேந்திரனிடம் பேசினோம். " இதுபற்றி ராஜாவிடம் கேட்பதற்குள் அவர் ரயில் ஏறிச் சென்றுவிட்டார். மிகுந்த ஆதங்கமாக இருக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இவ்வாறு கோஷம் எழுப்புவது கண்டிக்கத்தக்கது. 'அவர் ரயில்வே நிர்வாகத்தில் உறுப்பினராக இருக்கிறார்' என்கிறார்கள். அதற்காக இத்தனை அதிகாரிகளும் ஒரே இடத்தில் கூடி, அவருக்கு மரியாதை செலுத்துகிறார்கள். ஓர் அமைச்சருக்கே கூட இந்தளவுக்கு மரியாதை கிடைக்குமா என்று தெரியவில்லை. வரும் காலங்களில் இதுபோன்ற செயல்பாடுகளை அவர் தவிர்க்க வேண்டும்" என்றார் நிதானமாக.
இதுகுறித்து ஹெச்.ராஜாவிடம் பேசினோம். " ஏன்... 'பாரத் மாதா கீ ஜே...' என்று கோஷம் போடக் கூடாதா? 'வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜே' என்று அதிகாரிகள்கூட கோஷம் போடலாம். 'பா.ஜ.க வாழ்க...' என்று அதிகாரிகள் கோஷம் எழுப்பினால் கேள்வி எழுப்பலாம். இதில் என்ன தவறு இருக்கிறது" என்றார்.
' ஹெச்.ராஜாவைச் சுற்றி ஏதாவது ஒரு சர்ச்சை வளையமிட்டுக் கொண்டே இருக்கும். ரயில் நிலையத்தில் நடந்த வாக்குவாதமும் அதில் ஒன்று' என்கின்றனர் சி.பி.ஐ தோழர்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.