அளவுக்கு அதிகமா சாப்பிடுவனைப் பார்த்து... 'சாப்பாட்டு ராமன்' என்ற பட்டத்தைச் சூட்டிவிடுவோம். அதுபோலத்தான் இந்தப் பெண்ணுக்கு 'சாப்பாட்டு ராணி' என்றே பட்டத்தைச் சூட்டிவிடலாம். சீனாவைச் சேர்ந்த 24 வயது மி சிஜுனைப் (Mi zijun) பார்த்தவர்கள், ஆஹா எவ்வளவு அழகாகவும் ஸ்லிம்மாகவும் உள்ளார். டயட் விஷயத்தில் கறாராக இருப்பவரோ என்று நினைப்பார்கள். அப்படி நினைத்தவர்கள் அவள் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு ஆச்சர்யத்தில் மயங்கி விழுகிறார்கள்.
சாதாரணமாக நமக்கு ஒரு கப் அல்லது ஒரு ப்ளேட் சாதம் சாப்பிட்ட உடனே 'ஏவ்' என்று ஏப்பம் வந்துவிடும். ஆனால் மி சிஜுன் சில நிமிடங்களிலேயே 4 கிலோ சாதத்தை 'ஸ்வாகா' செய்துவிட்டார். கேக்கவே வியப்பாக உள்ளதா! இன்னும் இவர் சாப்பிடுவதைப் பட்டியல் போட்டால் 'கிர்ர்ர்'னு தலை சுற்றுவது நிச்சயம். நூடுல்ஸ் ஆர்டர் செய்வது குறைந்தது 12 கப்கள். ஸ்நாக்ஸ் என்றால் 108 ஸ்ப்ரிங் ரோல்ஸ், 52 கேக் துண்டுகள், சிக்கன் சாப்பிடும் ஆசை வந்தால் இரண்டு முழு கோழிகளைக் காலி செய்துவிடுகிறார். க்ராஃபிஷ் (craw fish), இது ஓர் இறால் வகையைச் சார்ந்த மீன். இது இவரின் விருப்பமான உணவு. அதனால் கிலோ கணக்கில்தான் சாப்பிடுவார். இப்போது உங்களுக்கு மி சிஜுனை நினைத்தாலே மாயா பஜார் படத்தில் வரும் கடோத்கஜன் நினைவிற்கு வருமே.
சமீபத்தில் கிழக்கு சீனாவில் உள்ள ஹங்ழோவ் நகரில் நடைப்பெற்ற சாப்பிடும் போட்டியில் 4 கிலோ வெறும் சாதத்தைச் சத்தமில்லாமல் சாப்பிட்டு பார்ப்போரைக் கதிகலக்க வைத்துள்ளார். இதற்கு நடுநடுவே இரண்டு பாட்டில்கள் தண்ணீர் வேறு குடித்துள்ளார். இவருடன் போட்டிப் போட்ட மற்றவர்கள் இவர் சாப்பிட்டதன் கால் பங்குக்கூட சாப்பிடமுடியாமல் முழி பிதுங்கி, போட்டியைவிட்டு விலகி விட்டார்கள். மி சிஜுக்கு 'சூப்பர் ஈட்டர்' பட்டத்தை சூட்டிவிட்டனர்.
ஆளைப் பார்த்து எடைப் போடக்கூடாது என்று சும்மாவா சொன்னார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.