சென்னை: சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவம் நடந்தவுடன், இந்த வழக்கை மத்திய ரயில்வே படை பிரிவு விசாரிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு திடீரென தமிழக ரயில்வே போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில இது குறித்து விசாரித்தபோது, ''இந்த வழக்கு இன்று இரவு தமிழக சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் தமிழக ரயில்வே போலீஸுக்கு முதலில் மாற்றி அங்கிருந்து, சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட இருக்கிறது. இது வழக்கமாக நடக்கிற ஒன்றுதான்" என்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, நேற்று இரவு 9 மணியளவில், தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யான அசோக்குமார், யாருக்கும் தகவல் சொல்லாமல் நேரிடையாக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று, பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரயிலின் பார்சல் கோச்சை பார்வையிட்டார். அவருடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யான திரிபாதியும் வந்திருந்தார். இதே போல், சுவாதி கொலை நடந்த இடத்தையும் யார் கண்ணிலும் படாமல், இரவு நேரத்தில் அசோக்குமார் பார்வையிட்டுச் சென்றார். 'இருட்டில், டார்ச் லைட் வெளிச்சத்தில் டி.ஜி.பி. ஏன் ரகசியமாக வரவேண்டும்? பகல் வேளையிலே வரலாமே...' என்று அதிகாரிகள் முணு முணுக்கிறார்கள்.
சேலத்திலிருந்து பணத்துடன் பயணிப்பதற்கு முன்பு, காலி கோச் ஈரோட்டில் ஒரு நாள் முழுக்க நின்றிருந்ததாம். அங்கிருந்து கோவை சென்றதாம். பிறகுதான், சேலம் வந்து சேர்ந்ததாம். இந்த ரூட்டில் காலி கோச் ரவுண்ட் வருவதற்கு முன்பே, கோச்சின் கூரையை மர்ம நபர்கள் துளை போட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

''துளையை போட்டுவிட்டு, அதை வெறுமனே மூடி வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட கோச்சில்தான் பணம் பயணிக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட சிலர்தான் இந்த வேலையை பார்த்திருக்கிறார்கள். ஏனென்றால், ஒடும் ரயிலின் கூரையில் துளையிட முடியாது. இதை தெரிந்து கொண்டு வெறுமனே மூடி வைத்ததை எங்கோ ஒரு இடத்தில் ரயில் நிற்கும்போது, அப்புறப்படுத்தி உள்ளே இறங்கி பணத்தை கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்த கோணத்திலும் விசாரிக்கிறோம்" என்கிறார்கள் போலீஸார்.
அவர்களிடம் நாம் இடைமறித்து, ''செல்லாத பணம்தானே..? இதை தெரியாமல்தானே கொள்ளையடித்திருக்கிறார்கள்?" என்றோம். அதற்கு, ''பணம் பயணிக்கிற கோச், பணம் எவ்வளவு.. என்கிற அனைத்து விவரங்களையும் சேகரித்த கொள்ளை கோஷ்டியினர், செல்லாத பணத்தை எடுக்க திட்டமிடுவார்களா..? பழைய நோட்டுகள்தான் என்பதை நன்கு தெரிந்து கொண்டுதான் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் பற்றி நிறைய க்ளூக்கள் கிடைத்துள்ளன. பொறுத்திருந்து பாருங்கள்" என்றார்கள் நம்மிடம்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.